திருச்சி மாவட்டம் புலிவலம் அருகேயுள்ள கோட்டாத்தூரில் தனியார் நிறுவனம் ஒன்று சூரிய மின்சாரம் தயாரித்து வருகிறது. இன்று அந்நிறுவன பணியாளர்கள், அதற்காக பணிகளை மேற்கொள்வதற்காகபூமியை தோண்டிய போது, கடப்பாரையின் மீது ஏதோ மோதுவது போன்ற சத்தம் ஏற்படட்டுள்ளது. இதையடுத்து அங்குள்ளவர்கள் தோண்டி பார்த்தபோது 3 அடி உயரமுள்ள கற்களால் ஆன விஷ்ணு மற்றும் லட்சுமி சிலைகள் இருப்பதைக் கண்டு ஆச்சரியமடந்தனர். இதுகுறித்து, துறையூர் வட்டாட்சியரிடம் தகவல் அளிக்கபட்டது. சம்பவ இடத்திற்கு வந்த வட்டாட்சியர் மோகன், சிலைகளை ஆய்வு செய்ததோடு அதனை பத்திரமாக மீட்டு வட்டாட்சியர் அலுவலகத்தில் உள்ள பாதுகாப்பு அறையில் கொண்டு வைத்தார். பூமியில் இருந்து சாமி சிலைகள் கண்டெடுக்கப்பட்டது இப்பகுதியில் உள்ள மக்களுக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

Comments are closed.