Rock Fort Times
Online News

அன்பில் பொய்யாமொழி பிறந்தநாள் விழா: அமைச்சர் மகேஷ் மாலை அணிவித்து மரியாதை…!

திமுக மாநில இளைஞரணி முன்னாள் துணைச்செயலாளரும், முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான மறைந்த அன்பில் பொய்யாமொழிக்கு இன்று (08-05-2024)
71 வது பிறந்தநாள் ஆகும். இதனை முன்னிட்டு திருச்சி கிராப்பட்டியில் உள்ள அவரது இல்லத்தில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த அன்பில் பொய்யாமொழி திருவுருவப் படத்திற்கு திருச்சி தெற்கு மாவட்ட  திமுக செயலாளரும்,  பள்ளிக் கல்வித்துறை அமைச்சருமான அன்பில் மகேஷ் பொய்யாமொழி, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் அன்பில் பெரியசாமி ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.  மேலும், திருச்சி கிழக்கு மாநகர செயலாளர் மு.மதிவாணன், தலைமை செயற்குழு உறுப்பினர்  வண்ணை அரங்கநாதன், மாவட்ட துணைச் செயலாளர் செங்குட்டுவன் மற்றும் கழக நிர்வாகிகள் மாலை அணிவித்தும், மலர் தூவியும் மரியாதை செலுத்தினர்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்