தமிழக சட்டமன்ற தேர்தல் நெருங்கிவரும் நிலையில், அரசியல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. திமுக, அதிமுக, பாரதிய ஜனதா கட்சி, தேசிய முற்போக்கு திராவிட கழகம், தமிழக வெற்றிக்கழகம், நாம் தமிழர் கட்சி என அனைத்துக் கட்சிகளுமே தங்களது தேர்தல் பணிகளை தொடங்கி விட்டன. புதிய வரவான விஜயை இழுக்க காங்கிரஸ் மற்றும் பாரதிய ஜனதா கட்சிகள் முழு முயற்சிகள் மேற்கொண்டு வருகின்றன. ஆனால், அவரோ தனது தலைமையில் தான் கூட்டணி அமைய வேண்டும் என கூறி வருகிறார். இவ்வாறு பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா டிச.15-ந்தேதி தமிழகம் வருகிறார். வேலூரில் நடைபெறும் நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக தமிழகம் வரும் அவர் கூட்டணி, தேர்தல் பணிகள் தொடர்பாக பா.ஜ.க. நிர்வாகிகளுடன் முக்கிய ஆலோசனை நடத்துவார் என தகவல் வெளியாகி உள்ளது. அமித்ஷாவின் தமிழகம் வருகை முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.

Comments are closed.