அம்பேத்கரின் 68வது நினைவு தினம் : திருச்சி மாநகர் மாவட்ட அதிமுக செயலாளர் ஜெ.சீனிவாசன் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை !
மறைந்த சட்டமேதை அம்பேத்கரின் நினைவு தினம் ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 6ம் தேதி அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி திருச்சி அரிஸ்டோ ரவுண்டானாவில் அமைந்துள்ள அன்னாரின் திருவுருவ சிலைக்கு திருச்சி மாநகர் மாவட்ட அதிமுக செயலாளரும், முன்னாள் துணை மேயருமான ஜெ.சீனிவாசன் தலைமையில் அதிமுக நிர்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இந்நிகழ்வில் கழக அமைப்பு செயலாளரும் முன்னாள் மாநிலங்களவை உறுப்பினருமான டி.ரத்தினவேல், கழக புரட்சித்தலைவி அம்மா பேரவை துணை செயலாளர் சி.அரவிந்தன், மாவட்ட கழக இணை செயலாளர் ஏ.ஜாக்குலின், துணைச் செயலாளர் ஆர்.வனிதா, மாவட்ட அணி செயலாளர்கள் ஆர்.ராஜேந்திரன். ஜெ. இலியாஸ் பகுதி கழக செயலாளர்கள் நாகநாதர் எ.பாண்டி, வி.கலைவாணன், மலைக்கோட்டை எம்.ஏ.அன்பழகன், என்.எஸ்.பூபதி, எல்.கே.ஆர்.ரோஜர், டி.சுரேஷ்குப்தா, மற்றும் நிர்வாகிகள் பி.ரஜினிகாந், டி.ஆர்.சுரேஷ்குமார், கருமண்டபம் பி.சுரேந்திரன், சதீஷ்குமார் இந்திரா, கீதா ராமநாதன், மலைக்கோட்டை மு.கதிரவன், பி.நாகராஜ், ஜெயஸ்ரீ, வசந்தம் டி.செல்வமணி, பிரபாகரன் சாதிக் அன்பழகன், உறையூர் ஆனந்த், ஜெனி கிளாரா, ரமணி(எ)எஸ்.லால், எம்.சக்தி, கல்லுக்குழி முருகன், புனித கழக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.


Comments are closed.