மகா சிவராத்திரியை முன்னிட்டு பிரஜாபிதா பிரம்மா குமாரிகள் ஈஸ்வரிய விஷ்வ வித்யாலயம் அமைப்பு சார்பில் காஞ்சிபுரத்தில் அமைக்கப்பட்டுள்ள அமர்நாத் பனி லிங்கத்தை வியப்புடன் மக்கள் கண்டு திாிசித்து வருகின்றனா். கோயில் நகரமான காஞ்சிபுரத்திலுள்ள அனைத்து சிவாலயங்களிலும் மகா சிவராத்திரியை ஒட்டி பொதுமக்களும், பக்தர்களும் சிறப்பு வழிபாடு செய்ய அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் காஞ்சிபுரம் வந்தவாசி சாலையிலுள்ள ஓர் தனியார் திருமண மண்டபத்தில் பிரஜாபிதா பிரம்மா குமாரிகள் ஈஸ்வரிய விஷ்வ வித்யாலயம் அமைப்பு சார்பில் அமர்நாத்தில் உள்ள பனி குகை போலேவே மிகவும் தத்ரூபமாக அரங்கம் அமைக்கப்பட்டு,முழுக்க முழுக்க ஐஸ்கட்டியினால் ஆன பனி லிங்கம் மிக தத்ரூபமாக பக்தர்களுக்கு தரிசனத்திற்காக வைக்கப்பட்டுள்ளது. இந்த அமர்நாத் பனி லிங்கத்தை ஏராளமான பொதுமக்கள் தங்கள் குடும்பத்தனிருடன் வந்து தரிசித்து வருகின்றனர். அங்கு வரும் அனைவருக்கும் ராஜ தியான யோகம் குறித்த தகவல்களை பிரஜாபிதா பிரம்மா குமாரிகள் ஈஸ்வரிய விஷ்வ வித்யாலயம் அமைப்பு நிர்வாகிகள் எடுத்துரைக்கின்றனா். மேலும் மகா சிவராத்திரி குறித்த பல்வேறு தகவல்களும், புகைப்பட கண்காட்சியாக காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. இன்று ஒரு நாள் மட்டும் மகா சிவராத்திரியை முன்னிட்டு மாலை 4 மணி முதல் இரவு முழுவதும் பக்தர்கள் தரிசனம் மேற்கொள்ளுவதற்க்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.