Rock Fort Times
Online News

அ.தி.மு.க.வுடன் கூட்டணி தொடர்கிறது! மத்திய அமைச்சர் அமித்ஷா திட்டவட்டம்!

தமிழகத்தில், அ.தி.மு.க., உடனான பா.ஜ.க கூட்டணி தொடர்கிறது என, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா நேற்று தெரிவித்தார். தமிழகத்தில் அ.தி.மு.க. கூட்டணியில் பா.ஜ.க அங்கம் வகித்து வருகிறது. இந்த கூட்டணியில் பிளவு ஏற்பட்டு இருப்பதாகவும், அடுத்த ஆண்டு நடக்கவுள்ள லோக்சபா தேர்தலில், அ.தி.மு.க., கூட்டணியில் இருந்து பா.ஜ.க விலகிவிடும் என்றும் சமீப நாட்களாக செய்தி பரவி வருகிறது. இது குறித்து, இரு கட்சிகளின் தரப்பிலும் அதிகாரப்பூர்வமான அறிவிப்பு எதுவும் இதுவரை வெளியாகவில்லை. இந்நிலையில், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, புதுடில்லியில் நேற்று நடந்த தனியார் ‘டிவி’ நிகழ்ச்சியில் பங்கேற்றார். அப்போது, அ.தி.மு.க. பா.ஜ.க கூட்டணி குறித்து அவரிடம் கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு, ”தமிழகத்தில் அ.தி.மு.க., உடனான பா.ஜ., கூட்டணி தொடர்கிறது,” என, பதில் அளித்தார்.இதன் வாயிலாக, கூட்டணியில் பிளவு இல்லை என்பதை பா.ஜ.க தரப்பு உறுதி செய்துள்ளது.

Leave A Reply

Your email address will not be published.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்