Rock Fort Times
Online News

தனது பதவியை தவறாக பயன்படுத்தியதாக புகார்: பூஜா கேத்கரின் ஐஏஎஸ் தேர்ச்சி ரத்து…!

பதவியை தவறாக பயன்படுத்திய முறைகேடு புகார்களில் சிக்கிய பயிற்சி ஐஏஎஸ் அதிகாரியான பூஜா கேத்கரின் தேர்ச்சியை, மத்திய அரசுப்பணியாளர் தேர்வாணையம்  ரத்து செய்துள்ளது. மேலும், வருங்காலங்களில் அவர் யுபிஎஸ்சி தேர்வெழுதவும் நிரந்தரமாகத் தடை விதிக்கப்பட்டுள்ளது. 2022 ம் ஆண்டு குடிமைப் பணியியல் தேர்வில் தேர்ச்சி பெற்ற பூஜா கேத்கர், தன்னுடைய ஜாதி, பெற்றோர், பார்வைத் திறன் ஆகியவற்றில் போலியாக ஆவணங்களை மாற்றி, பணியில் சேர்ந்ததாகக் குற்றச்சாட்டு எழுந்தது. தனது பதவியைத் தவறுதலாக பயன்படுத்திய புகாரில், மகாராஷ்டிர அரசு அவரை பதவி நீக்கம் செய்தது.
குடிமைப் பணியியல் தேர்வில் ஊனமுற்றோர் மற்றும் பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினர்(obc) ஒதுக்கீட்டை தவறாக பயன்படுத்தியதற்காக, தில்லி காவல்துறை குற்றப் பிரிவினரால், பூஜா கேத்கர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. மேலும், இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 420 (ஏமாற்றுதல்), 464 (போலியான ஒருவரின் பெயரில் ஆவணம் தயாரித்தல்) உள்ளிட்ட பிரிவுகளின் கீழும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளன. 2023-ம் ஆண்டு ஐஏஎஸ் அதிகாரியான பூஜா, முன்பு புனே மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தகுதிகாண் உதவி ஆட்சியராக பணியாற்றினார். அங்கு, பணிபுரிந்த காலத்தில் அவர் தனது அதிகாரத்தை தவறாக பயன்படுத்தியதாக புகார் எழுந்ததும் குறிப்பிடத்தக்கது.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்