வெளிநாட்டில் இருந்து வந்த அஜித் இன்று தந்தையார் இறுதிச் சடங்கில் கலந்து கொண்டார். ரசிகர்கள் தொந்தரவு செய்ய வேண்டாம் எனவும் ஈமெயில் ஐடி மூலம் இரங்கல் செய்தியை அனுப்புங்கள் என்றும் டிவிட்டர் மூலம் வெளியிட்டுள்ள அஜித் ,அதற்கான ஈமெயில் ஐடியையும் அந்த ட்விட்டர் பதிவில் வெளியிட்டார்.எங்கள் தந்தை பி.எஸ். மணி, இன்று அதிகாலை தூக்கத்தில் காலமானார். அவருக்கு வயது 85. கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன்பு பக்கவாத நோயால் பாதிக்கப்பட்டார். அப்போது முதல் மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மருத்துவர்கள் திறம்பட சிகிச்சை அளித்து வந்தாலும் அருகில் உள்ளவர்கள் அவருக்கு உறுதுணையாக இருந்து வந்திருக்கிறார்கள்.அவருக்கும் எங்கள் குடும்பத்துக்கும் பலரால் வழங்கப்பட்ட ஆதரவுக்கு நாங்கள் நன்றியுள்ளவர்களாக இருக்கிறோம். அவரது மரணம் எங்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இந்த நேரத்தில், அவர் ஒரு நல்ல வாழ்க்கை வாழ்ந்தார் என்று நாங்கள் ஆறுதல் அடைகிறோம். பலரும் இரங்கல் செய்தியை அனுப்பி கொண்டிருக்கின்றனர். எங்களால் அழைப்புகளை எடுக்கவோ அல்லது செய்திகளுக்கு பதிலளிக்கவோ இயலவில்லை . அவரது இறுதி சடங்குகளை எங்கள் குடும்பத்தினர் மட்டுமே செய்வார்கள்.ரசிகர்கள் எந்தவித தொந்தரவும் செய்ய வேண்டாம். அனைவரும் எங்கள் விருப்பத்தை மதிப்பார்கள் என்று நம்புகிறோம் இவ்வாறு ட்விட்டர் பதிவில் அருண்குமார் ,அஜித்குமார் ,அனில் குமார் ஆகிய மூன்று சகோதரர்களும் தெரிவித்துள்ளனர். மேலும் இரங்கல் செய்தியை அனுப்ப விரும்புபவர்கள் psmanifamily@gmail.com. என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கலாம்.

**mitolyn**
Mitolyn is a carefully developed, plant-based formula created to help support metabolic efficiency and encourage healthy, lasting weight management.