Rock Fort Times
Online News

ஐம்பொன் செங்கோல்..!* நாட்டியக்குதிரை மண்ணச்சநல்லூர் கதிரவனுக்கு குணசீலத்தில் குருநாதன் உள்ளிட்ட கட்சியினர் சிறப்பான வரவேற்பு!

திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூர் சட்டமன்ற தொகுதியில் திமுக வேட்பாளராக தற்போதைய எம்எல்ஏவான சீ.கதிரவன் மீண்டும் போட்டியிடுகிறார். இதையொட்டி தொகுதிக்குட்பட்ட பல்வேறு கிராமங்களுக்கு நேரில் சென்று பொதுமக்களை சந்தித்து வாக்கு சேகரித்து வருகிறார். அதன்படி, இன்றைய தினமான ஏப்ரல் 4ம் தேதி முசிறி மேற்கு ஒன்றியத்திற்குட்பட்ட குணசீலம், கல்லூர், ஆமூர், ஏவூர் உள்ளிட்ட பகுதிகளில் கதிரவன் பிரச்சாரம் மேற்கொண்டார். இவரின் பிரச்சார பயணம் குணசீலத்தில் தொடங்கியது. பிரச்சாரத்தை ஆரம்பிக்கும் முன்பு குணசீலத்தில் உள்ள பிரசன்ன வெங்கடாஜலபதி கோவிலுக்கு சென்று பெருமாளை மனம் உருகி வணங்கி வழிபட்ட கதிரவன், பின்பு கோவிலுக்கு வெளியே திரளாக கூடியிருந்த பொதுமக்கள் மத்தியில் உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது, “10 ஆண்டுகால அதிமுக ஆட்சியில் மிகவும் பின்தங்கி இருந்த குணசீலம், ஆமூர், ஏவூர் ஊராட்சிப் பகுதிகளில் கடந்த 5 ஆண்டுகளில் தமிழக அரசின் அனைத்துத் துறைகளின் சார்பில் சுமார் 6 கோடி ரூபாய் மதிப்பில் வளர்ச்சித் திட்டப் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.  காவிரி ஆற்றின் கரையில் இருந்தாலும் விவசாயத்திற்கு தண்ணீர் பற்றாக்குறை இருந்த இப்பகுதியில் கடந்த 5 ஆண்டுகளில் மூழ்கிய குளங்கள் சீரமைக்கப்பட்டும், வாய்க்கால்கள், குட்டைகள், ஏரிகள் தூர்வாரப்பட்டும் விவசாயம் செழிக்க நடவடிக்கை எடுத்துள்ளேன். மக்களின் அடிப்படைத் தேவைகளான குடிநீர், சாலை வசதிகள் பல கோடி ரூபாய் மதிப்பில் செய்யப்பட்டுள்ளன. கிராமப்புற மாணவர்களின் செழிப்பானக் கல்விக்கு துவக்கப் பள்ளிகள், நடுநிலைப் பள்ளிகளுக்குப் பல கோடி ரூபாய் மதிப்பில் புதிய கட்டிடங்கள் மற்றும் சமையலறை மேலும் ஸ்மார்ட் வகுப்பறைகள், சுற்றுச்சுவர், கழிவறைகள், அமைத்து கொடுத்துள்ளேன்.bகுண்டும், குழியுமான சாலைகளால் அவதிப்பட்ட மக்களுக்கு கடந்த 5 ஆண்டுகளில் தரமான சாலை வசதிகள் அமைத்துக் கொடுத்துள்ளேன். தரமான சாலைகள் இல்லாத கிராமங்களே இல்லை என்ற நிலையை உருவாக்கி உள்ளேன். தொகுதி மேம்பாட்டு நிதியிலும் அனைத்துத் துறை அமைச்சர்களின் மூலமாகவும் பல்வேறு திட்டப் பணிகள் செய்து கொடுத்துள்ளேன். மேலும் இப்பகுதியில் விண்ணப்பித்த அனைத்து மகளிர்க்கும் மகளிர் உரிமைத் தொகை கிடைப்பதற்கும் மாணவ, மாணவிகளுக்கு புதுமைப்பெண், தமிழ்ப்புதல்வன் திட்டத்தின் கீழ் லேப்டாப் வழங்கவும் நடவடிக்கை எடுத்துள்ளேன். மேலும் எனது தொகுதி மக்கள் ஆரோக்கியமான வாழ்க்கை வாழ்வதற்கு முக்கியத்துவம் அளித்து தனது மருத்துவமனையில் இலவச சிகிச்சை வழங்கி வருகிறேன். அதிநவீன மருத்துவ கருவிகளுடன் இயங்கும் தனது மருத்துவமனையில் ஆமூர், குணசீலம், ஏவூர் ஆகிய மூன்று ஊராட்சிகளில் மட்டும் உள்நோயாளிகள், வெளி நோயாளிகள் என 12 ஆயிரத்து 775 பேர் பிரசவம், கை கால் முறிவு, குடலிறக்கம், ஆபத்தான தலைக்காயங்கள் உள்ளிட்ட அறுவை சிகிச்சைகள் மூலம் பயன் அடைந்துள்ளனர். இப்பகுதியில் விவசாயம் செழிக்கவும் மக்கள் அமைதியாக, ஆரோக்கியமாக வாழவும் திமுக அரசின் நலத்திட்டங்கள் தொடரவும், எனக்கு உதயசூரியன் சின்னத்தில் வாக்களித்து அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்ய வேண்டும் இவ்வாறு எம்எல்ஏ கதிரவன் பேசினார். இதனிடையே அவருக்கு உள்ளூர் கட்சி பிரமுகர்களான குணசீலம் முன்னாள் ஊராட்சித்தலைவர் குருநாதன் உள்ளிட்ட கட்சியினர் ஐம்பொன் செங்கோல், நாட்டிய குதிரை, வானவேடிக்கைகள் முழங்க பிரம்மாண்ட வரவேற்பளித்தனர்.

 

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்