Rock Fort Times
Online News

சொத்து வரி உயர்வை திரும்ப பெற வலியுறுத்தி திருச்சி மாவட்டத்தில் 33 இடங்களில் அதிமுகவினர் மனித சங்கிலி போராட்டம்…!

மாவட்டச் செயலாளர்கள் ப.குமார், மு.பரஞ்ஜோதி, ஜெ.சீனிவாசன் பங்கேற்பு

உயர்த்தப்பட்ட சொத்து வரி உயர்வை தமிழக அரசு திரும்ப பெற வலியுறுத்தி அதிமுக சார்பில் இன்று(08-10-2024) மாநிலம் தழுவிய அளவில் மனித சங்கிலி போராட்டம் நடைபெற்றது.  இதேபோல, திருச்சி மாநகர் மாவட்டத்தில் பகுதி வாரியாக போராட்டம் நடந்தது.  மலைக்கோட்டை பகுதி சார்பில் மலைக்கோட்டை தபால் நிலையம் முதல் சென்னை சில்க்ஸ் வரை பகுதி செயலாளர் அன்பழகன் தலைமையில் மனித சங்கிலி போராட்டம் நடந்தது. இதில்  அமைப்புச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான கோகுல இந்திரா, மாவட்ட செயலாளர் ஜெ.சீனிவாசன் ஆகியோர் கலந்துகொண்டு கண்டன உரை நிகழ்த்தினர்.  இதில் அவைத்தலைவர் ஐயப்பன், மாநில ஜெயலலிதா பேரவை துணைச் செயலாளர் கவுன்சிலர் அரவிந்தன், ஜெயலலிதா பேரவை மாவட்ட செயலாளர் இன்ஜினியர் கார்த்திகேயன்,  மாவட்ட எம்ஜிஆர் மன்ற இணைச் செயலாளர் இன்ஜினியர் இப்ராம்ஷா, மகளிர் அணி மாவட்ட செயலாளர் நசீமா பாரிக், ஐடி பிரிவு வெங்கட், முன்னாள் கோட்டத் தலைவர் மனோகரன்,  இலியாஸ், ஜெகதீசன், வக்கீல்கள் முல்லை சுரேஷ், முத்துமாரி, சசிகுமார், சுரேஷ் ஜெயராமன், கங்கை மணி மற்றும் எனர்ஜி அப்துல் ரகுமான், ராமநாதன், ஈஸ்வரன், சிங்க முத்து, ரமணிலால், அப்பாகுட்டி, உடையான்பட்டி செல்வம், பொன். அகிலாண்டம் உள்பட ஏராளமான நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

காந்தி மார்க்கெட் பகுதி சார்பில் கமான் வளைவு முதல் பெரிய கடை வீதி கள்ளத்தெரு வரை பகுதி செயலாளர் சுரேஷ்குப்தா தலைமையிலும்,பாலக்கரை பகுதி சார்பில் பாலக்கரையில் பகுதி செயலாளர் ரோஜர் தலைமையிலும், காஜாபேட்டை பகுதி சார்பில் காஜா பேட்டை பூங்கா அருகாமையில் தொகுதி செயலாளர் வெல்லமண்டி சண்முகம் தலைமையிலும், ஏர்போர்ட் பகுதி சார்பில் புதுக்கோட்டை ரோடு விமான நிலையம் எதிரில் பகுதிச் செயலாளர் ஏர்போர்ட் விஜி தலைமையிலும், உறையூர் பகுதி சார்பில் பாளையம் பஜார் சாலை ரோட்டில் பகுதி செயலாளர் என்.எஸ்.பூபதி என்கிற பூபேந்திரன் தலைமையிலும், தில்லைநகர் பகுதியில் பீமநகர் செடல் மாரியம்மன் கோவில் பகுதியில் பகுதி செயலாளர் எம்.ஆர்.ஆர்.முஸ்தபா தலைமையிலும், புத்தூர் பகுதி சார்பில் புத்தூர் பவானி ஹோட்டல் அருகில் பகுதி செயலாளர் புத்தூர் ராஜேந்திரன் தலைமையிலும், ஜங்ஷன் பகுதி சார்பில் மத்திய பஸ் நிலையம் அருகாமையில் பகுதி செயலாளர் நாகநாதர் பாண்டி தலைமையில்,  கருமண்டபம் பகுதி சார்பில் எடமலைப்பட்டிபுதூர் தங்க ராஜா தியேட்டர் பகுதியில் பகுதி செயலாளர் கலைவாணன் தலைமையிலும் மனித சங்கிலி போராட்டம் நடைபெற்றது.

திருச்சி புறநகர் தெற்கு மாவட்டம்

திருச்சி புறநகர் தெற்கு மாவட்டம் சார்பில் நகராட்சி பேரூராட்சி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் மனித சங்கிலி போராட்டம் நடந்தது.  மணப்பாறை நகராட்சி பகுதியில் நகரச் செயலாளர் பவுன் ராமமூர்த்தி தலைமையில் மனித சங்கிலி போராட்டம் நடந்தது. இதில் புறநகர் தெற்கு மாவட்ட செயலாளர் ப. குமார் கலந்து கொண்டார். மேலும் லால்குடி நகராட்சியில் பொன்னி சேகர் தலைமையிலும்,  துவாக்குடி நகராட்சியில் நகரச் செயலாளர் எஸ்.பி பாண்டியன் தலைமையிலும், பொன்னம்பட்டி பேரூராட்சியில் பேரூர் செயலாளர் திருமலை சாமிநாதன் தலைமையிலும், பூவாளூர் பேரூராட்சியில் பேரூராட்சி செயலாளர் ஜெயசீலன் தலைமையிலும் , புள்ளம்பாடி பேரூராட்சியில் பேரூர் செயலாளர் ஜேக்கப் அருள்ராஜ் தலைமையிலும், கல்லக்குடி பேரூராட்சியில் பேரூர் செயலாளர் பிச்சை பிள்ளை தலைமையிலும்,  பொன்மலை பகுதியில் பகுதி செயலாளர் பாலசுப்பிரமணியம், திருவெறும்பூர் பகுதி சார்பில் பாஸ்கர், அரியமங்கலம் பகுதி சார்பில் தண்டபாணி ஆகியோர் தலைமையிலும் மனித சங்கிலி போராட்டம் நடைபெற்றது.  இதில் மணப்பாறை நகரத்தில் நடந்த மனித சங்கிலி போராட்டத்தில் மாவட்ட செயலாளர் குமார் கலந்து கொண்டு கண்டன உரை நிகழ்த்தினார்.  இந்தப் போராட்டத்தில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

திருச்சி புறநகர்  வடக்கு மாவட்டம்

திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட அதிமுக சார்பில் , ஸ்ரீரங்கம் பகுதி, திருவானைக்காவல் பகுதி, முசிறி நகரம், துறையூர் நகரம், சிறுகமணி பேரூராட்சி,  மண்ணச்சநல்லூர் பேரூராட்சி, ச.கண்ணனூர் பேரூராட்சி, தொட்டியம் பேரூராட்சி, காட்டுப்புத்தூர் பேரூராட்சி, மேட்டுப்பாளையம் பேரூராட்சி, தா.பேட்டை பேரூராட்சி, உப்பிலியபுரம் பேரூராட்சி, பாலகிருஷ்ணம்பட்டி பேரூராட்சி ஆகிய இடங்களில் மனித சங்கிலி போராட்டம் நடந்தது.  ஸ்ரீரங்கத்தில் நடந்த மனித சங்கிலி போராட்டத்தில் மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சருமான பரஞ்ஜோதி கலந்துகொண்டு கண்டன உரையாற்றினார்.  இந்த போராட்டத்தில் அமைப்புச் செயலாளர்கள் வளர்மதி, மனோகரன், மாநில எம்ஜிஆர் இளைஞர் அணி இணைச் செயலாளர் பொன் செல்வராஜ், மீனவரணி பேரூர் கண்ணதாசன், இலக்கிய அணி ஸ்ரீதர், மாணவரணி அறிவழகன் மற்றும் அணி நிர்வாகிகள், ஒன்றிய செயலாளர்கள் முத்துகருப்பன், கோப்பு நடராஜ், ஜெயக்குமார், ராஜகோபால், இளைஞர் அணி தேவா, பகுதி செயலாளர் சுந்தர்ராஜன், டைமன் திருப்பதி, நிர்வாகிகள் சமயபுரம் ராமு,ரவிசங்கர், வி.என்.ஆர் செல்வம், தமிழரசன், திருப்புகழ் கலைமணி உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். திருச்சி மாவட்டத்தில் மொத்தம் 33 இடங்களில் மனித சங்கிலி போராட்டம் நடைபெற்றது.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்