Rock Fort Times
Online News

திருச்சி மரக்கடை எம்ஜிஆர் சிலை அருகே நாளை அதிமுக கண்டன ஆர்ப்பாட்டம்-மாநகர் மாவட்ட செயலாளர் அறிக்கை…!

திருச்சி மாநகர் மாவட்ட அதிமுக செயலாளர் ஜெ.சீனிவாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
அதிமுக பொது செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி ஆணைக்கிணங்க, பட்டியல் இன மாணவியின் மீது வன்கொடுமையை ஏவி கொடூர தாக்குதல் நடத்தியவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்காத திமுக அரசை கண்டித்து நாளை(01-02-2024) மாநகர மாவட்ட செயலாளரான எனது தலைமையில் திருச்சி மரக்கடை எம் ஜி ஆர் சிலை அருகே நடைபெறும் ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும், அமைப்புச் செயலாளருமான
டி.ரத்தினவேல் கண்டன உரை ஆற்றுகிறார் . இந்த ஆர்ப்பாட்டத்தில் தலைமை கழக நிர்வாகிகள், முன்னாள் அமைச்சர்கள், முன்னாள் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், மாநில மாவட்ட நிர்வாகிகள், மாவட்ட சார்பு அணி செயலாளர்கள், பொதுகுழு உறுப்பினர்கள், பகுதி செயலாளர்கள், நிர்வாகிகள், வட்டக் கழக செயலாளர்கள், நிர்வாகிகள், செயல்வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் , பொதுமக்கள் திரளாக பங்கேற்க வேண்டுகிறேன். இவ்வாறு அதில் அவர் தெரிவித்துள்ளார்.

Comments are closed, but trackbacks and pingbacks are open.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்