Rock Fort Times
Online News

தவெகவில் இணையும் அதிமுக நிர்மல் குமார் !

அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தின் தகவல் தொழில்நுட்ப பிரிவு இணைச் செயலாளராகவுள்ள நிர்மல்குமார், தமிழக வெற்றிக் கழகத்தில் இணையவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஏற்கெனவே விடுதலை சிறுத்தைகள் கட்சியில் இருந்து விலகிய ஆதவ் அர்ஜுனா, பட்டினம்பாக்கத்தில் உள்ள விஜய் இல்லத்தில் சுமார் 40 நிமிடங்களுக்கு மேல் பேச்சுவார்த்தை நடத்தி இருந்தார். மேலும், ஆதவ் அர்ஜுனாவுக்கு கட்சியின் ஆலோசகர் அல்லது மாநில துணைப்பதவியும், தேர்தல் யுத்திகளை வகுக்கும் முக்கியமான பொறுப்பும் அவருக்கு வழங்க விஜய் திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில், அதிமுகவின் ஐடி பிரிவின் முக்கிய பொறுப்பாளராக இருக்கும் நிர்மல் குமாரும் தவெகவில் இணையவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. பாரதிய ஜனதா கட்சியின் மாநில தகவல் தொழில்நுட்பப் பிரிவின் தலைவராக இருந்த நிர்மல் குமார், கடந்த 2023ஆம் ஆண்டு அதிமுகவில் இணைந்தது குறிப்பிடத்தக்கது. ஆதவ் அர்ஜுனா, நிர்மல் குமாரை தொடர்ந்து, நாம் தமிழர் மற்றும் அதிமுகவில் இருந்து சில நிர்வாகிகள் தவெகவில் இணைய வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்