திருச்சி விமான நிலையத்திற்கு அமைச்சர் அன்பில் மகேஷ் வந்தபோது அதிமுகவினர் கோஷமிட்டதால் பரபரப்பு… (வீடியோ இணைப்பு)
சிவகங்கை மாவட்டத்தில் இன்று (ஜூலை 29) தேர்தல் பிரச்சாரம் மேற்கொள்வதற்காக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி சென்னையிலிருந்து விமானம் மூலம் திருச்சி விமான நிலையம் வந்தடைந்தார். அப்போது அவரை வரவேற்பதற்காக அதிமுக முன்னாள் அமைச்சர்கள், மாவட்ட செயலாளர்கள், முக்கிய நிர்வாகிகள் கூடியிருந்தனர். அப்போது திருச்சியில் இருந்து சென்னை செல்வதற்காக பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி விமான நிலையத்திற்குள் வந்தார். அப்போது அங்கு கூடியிருந்த அதிமுகவினர் “எடப்பாடி பழனிச்சாமி வாழ்க” என முழக்கமிட்டனர். ஆனால், எதையும் கண்டுகொள்ளாத அமைச்சர் சிரித்தபடியே அந்தப் பகுதியை கடந்து சென்றார். அமைச்சர் விமான நிலையத்திற்குள் வந்தபோது அதிமுகவினர் கோஷம் எழுப்பியதால் அங்கு சில நிமிடம் பரபரப்பு ஏற்பட்டது.
Comments are closed.