Rock Fort Times
Online News

அதிமுக தகவல் தொழில்நுட்ப பிரிவு நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்…*  திருச்சி மாநகர் மாவட்ட செயலாளர் ஜெ.சீனிவாசன் தலைமையில் நடைபெற்றது! 

அதிமுக முன்னாள் அமைச்சர் தங்கமணி அறிவுறுத்தலின்படி, திருச்சி மாநகர் மாவட்ட கழக  செயலாளர், முன்னாள் துணை மேயர்  ஜெ.சீனிவாசன் தலைமையில் மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் வெங்கட் பிரபு ஏற்பாட்டில் தகவல் தொழில்நுட்ப பிரிவு நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்  கட்சி அலுவலகத்தில்  நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாவட்ட எம்ஜிஆர் இளைஞர் அணி செயலாளர் ரஜினிகாந்த் , தகவல் தொழில்நுட்ப பிரிவு மண்டல நிர்வாகிகள் கிர்சாந்த் சுப்பிரமணியம், ராதா வேங்கடநாதன், மாவட்ட நிர்வாகிகள் கதிரவன், நாகராஜன், புத்தூர் ரமேஷ், அப்துல் சத்தார், தமிழ்ச்செல்வன், மகேந்திரன், மனோஜ், பாலக்கரை சுரேஷ், வேல்முருகன் தகவல் தொழில்நுட்ப பிரிவு பகுதி செயலாளர்கள் தளபதி சக்தி, பிரித்திவிராஜ், தில்லை விஸ்வா, போத்தீஸ்வரன், பாலசுப்பிரமணியன்,  கார்த்திக், சூரிமதி,  தகவல் தொழில்நுட்ப பிரிவு பகுதி நிர்வாகிகள் சரவணகுமார், ஜெரால்டு ராஜா, சிவா, பிரத்திந்தர், பிரசன்னா, பிரகதீஸ்வரன், நல்லதம்பி, நிஷப்தன்,  கோபால், பிரகாஷ், நிர்வாகிகள் செல்வம், மார்க்கெட் பிரகாஷ், ரமணி லால், ரகுநாதன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் வருகிற சட்டமன்ற தேர்தலின் போது எவ்வாறு செயல்படுவது என்பது குறித்து ஆலோசிக்கப்பட்டது.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்