Rock Fort Times
Online News

அதிமுக பொதுச்செயலாளர் செங்கோட்டையன்…- மதுரையில் ஒட்டப்பட்ட போஸ்டரால் பரபரப்பு!

முன்னாள் தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு இபிஎஸ் – ஓபிஎஸ் என இரண்டாக பிரிந்தது அதிமுக. அதன் பிறகு கட்சித் தொண்டர்கள் சேர்ந்து அதிமுக பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமியை தேர்வு செய்தனர்.எடப்பாடி பழனிசாமி அணியில் இருந்த செங்கோட்டையன், கடந்த மாதத்தில் அத்திக்கடவு – அவிநாசி திட்டம்  தொடர்பாக விவசாயிகள் நடத்திய நிகழ்ச்சியில், ஜெயலலிதா – எம்ஜிஆர் புகைப்படங்கள் இல்லை எனக் கூறி நிகழ்ச்சியை புறக்கணித்தார். அப்போதிலிருந்து எடப்பாடி பழனிசாமிக்கும், செங்கோட்டையனுக்கும் இடையே உரசல் ஏற்பட்டுள்ளதாக செய்திகள் பரவத் தொடங்கின.அதன் பிறகு செங்கோட்டையனின் ஒவ்வொரு நகர்வுகளும் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது. சமீபத்தில் டெல்லி சென்று திரும்பிய செங்கோட்டையன் பாஜக முக்கிய தலைவர்களை சந்தித்து வந்ததாக செய்திகள் கசிய தொடங்கின.இந்நிலையில் மதுரையில் அதிமுக பொது செயலாளர் செங்கோட்டையன் என குறிப்பிடப்பட்டு போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது. மதுரையை மாநகர் மாவட்டத்தை சேர்ந்த மத்திய தொகுதி செயலாளர் மிசா ஜி.எஸ் செந்தில் என்பவர் பெயரில் ஒட்டப்பட்டுள்ள போஸ்டரில், அதிமுக பொது செயலாளர் செங்கோட்டையனுக்கு ஒய் பிளஸ் பாதுகாப்பு வழங்கிய மத்திய அரசுக்கு நன்றி என்ற வாசகம் இடம் பெற்றுள்ளது. வைரலாகியுள்ள இந்த போஸ்டரில் எடப்பாடி பழனிசாமியின் பெயர் இடம் பெறவில்லை. அதே நேரத்தில், அதிமுக முக்கிய நிர்வாகிகளான ராஜன் செல்லப்பா எஸ்.பி.வேலுமணி, தங்கமணி ஆகியோரின் படங்கள் இடம்பெற்றுள்ளன. இது அக்கட்சியினர் மட்டுமின்றி தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை கிளப்பியுள்ளது.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்