Rock Fort Times
Online News

பிக் பாக்கெட் அடிப்பது போல் பதவியா? இபிஎஸ் குறித்து ஓபிஎஸ் கிண்டல்- சூடு பிடிக்கிறது அதிமுக தேர்தல் பரபரப்பு

அதிமுக பொதுச்செயலாளர் பதவிக்கு தேர்தல் நடைபெறும் தேதியை நேற்று தேர்தல் ஆணையாளர்கள் கழகத் துணைப் பொதுச் செயலாளர் நத்தம் விஸ்வநாதன் தேர்தல் பிரிவு செயலாளர் பொள்ளாச்சி ஜெயராமன் ஆகியோர் அறிவித்தனர். அதன்படி வரும் 26 ஆம் தேதி கழக பொதுச்செயலாளர் பதவிக்கு தேர்தல் நடைபெற உள்ளது அதற்கான வேட்பு மனு தாக்கல் இன்று காலை 10 மணிக்கு தொடங்கியது கழக பொதுச்செயலாளர் பதவிக்கு எடப்பாடி பழனிச்சாமி இன்று வேட்பு மனு தாக்கல் செய்தார். வேட்பு மனு தாக்கல் செய்ய கடைசி நாள் நாளை பிற்பகல் 3 மணி வரை. வேட்பு மனு பரிசீலனை வரும் 20ஆம் தேதி வேட்பு மனுவைதிரும்ப பெற கடைசி நாள் வரும் 21ஆம் தேதி. வரும் 26 ஆம் தேதி காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறுகிறது 27 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது இந்த நிலையில் அதிமுக கழக பொதுச்செயலாளர் தேர்தல் சிறுபிள்ளைத்தனமானது சட்ட ரீதியாக எதிர்கொள்வோம் அவசரகதியில் தேர்தல் நடைபெறுகிறது என்று அதிமுக ஓபிஎஸ் தரப்பு மூத்த நிர்வாகி பண்ருட்டி ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார் அதேசமயம் எந்தவித அவசரத்திலும் நடைபெறவில்லை என்று அதிமுக ஓபிஎஸ் தரப்பில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கருத்து தெரிவித்துள்ளார் இதற்கிடையில் தேர்தலை தடை செய்ய வேண்டும் என்று ஓபிஎஸ் தரப்பில் மனோஜ் பாண்டியன் சென்னை உயர்நீதிமன்றத்தில் அவசர வழக்கு ஒன்றை தாக்கல் செய்துள்ளார் அந்த அவசர வழக்கு நாளை காலை விடுமுறை என்றாலும் நீதிபதி குமரேஷ் பாபு விசாரணை நடத்துகிறார். எடப்பாடி பழனிசாமியை எதிர்த்து எவரும் மனு தாக்கல் செய்ய மாட்டார்கள் என்ற கருத்து நிலவி வருகிறது அப்படி நிகழ்ந்தால் எடப்பாடி பழனிச்சாமி கழகப் பொதுச் செயலாளராக போட்டியின்றி தேர்வு செய்யப்படுவார் என்று இபிஎஸ் ஆதரவாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர் இந்நிலையில் ஓபிஎஸ் ஆதரவாளர்களும் இபிஎஸ் ஆதரவாளர்களும் தனித்தனியே காரசாரமாக தங்கள் கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர் அதிமுக பரபரப்பு நாளை காலை நீதிமன்ற தீர்ப்புக்கு பின் எப்படி இருக்கும் என்பதை அரசியல் பார்வையாளர்கள் ஆர்வமாக எதிர்பார்த்து வருகின்றனர்

Leave A Reply

Your email address will not be published.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்