Rock Fort Times
Online News

திருச்சியில் அதிமுக சாதனை விளக்க துண்டு பிரசுரம் * மாநகர் மாவட்ட செயலாளர் ஜெ.சீனிவாசன் தலைமையில் நிர்வாகிகள் விநியோகம்…!

திருச்சி மாநகர் மாவட்ட ஜெயலலிதா பேரவை சார்பில் மாவட்ட ஜெ.பேரவை செயலாளர் முன்னாள் ஆவின் சேர்மன் கார்த்திகேயன் ஏற்பாட்டில், அதிமுக ஆட்சியில் நடைபெற்ற சாதனைகளை எடுத்துக் கூறும் விதமாக ஜங்ஷன் பகுதியில் துண்டு பிரசுரங்கள் விநியோகிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த துண்டு பிரசுரங்களை முதலில் ஜங்ஷன் வழிவிடு வேல்முருகன் கோயிலில் வைத்து சாமி தரிசனம் செய்த பிறகு பொதுமக்களுக்கு விநியோகம் செய்தனர். இதற்கு திருச்சி மாநகர் மாவட்ட கழக செயலாளரும், மாநகராட்சி முன்னாள் துணை மேயருமான ஜெ.சீனிவாசன் தலைமை தாங்கி அ.தி.மு.க ஆட்சியில் நிகழ்த்தப்பட்ட சாதனைகள் அடங்கிய துண்டு பிரசுரங்களை பொதுமக்களுக்கு விநியோகித்து பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.

இந்நிகழ்வில் கழக அமைப்பு செயலாளர் ரத்தினவேல், கழக ஜெ.பேரவை துணைச் செயலாளர் அரவிந்தன் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சியில் ஜெயலலிதா பேரவை மாநில துணைச் செயலாளர் ஜோதிவாணன், மாவட்ட துணை செயலாளர்கள் வனிதா, பத்மநாதன், மாநகராட்சி மண்டல குழு தலைவரும், மீனவரணி மாவட்ட செயலாளருமான கோ.கு. அம்பிகாபதி, அணிச் செயலாளர்கள் – இளைஞர் அணி ரஜினிகாந்த், இலக்கிய அணி பாலாஜி, பாசறை லோகநாதன், ஐ.டி. பிரிவு வெங்கட்பிரபு, தொழிற்சங்கம் ராஜேந்திரன், முன்னாள் கோட்டத் தலைவர் ஞானசேகர், சிறுபான்மை பிரிவு அப்பாஸ், சகாபுதீன், இளைஞர் அணி இணைச் செயலாளர் சில்வர் சதீஷ் குமார், கலைப்பிரிவு பொருளாளர் உறையூர் சாதிக் அலி, ஜெயலலிதா பேரவை தலைவர் எனர்ஜி அப்துல் ரகுமான், பொதுக்குழு உறுப்பினர் வெல்ல மண்டி பெருமாள், பகுதி கழகச் செயலாளர்கள் அன்பழகன், என்.எஸ்.பூபதி, கலீல் ரகுமான், நாகநாதர் பாண்டி, புத்தூர் ராஜேந்திரன், கலைவாணன், ரோஜர், வாசுதேவன், வழக்கறிஞர் அணி நிர்வாகிகள் வக்கீல்கள் முல்லை சுரேஷ், முத்துமாரி, சசிகுமார், ஜெயராமன், சுரேஷ், தினேஷ்பாபு, நிர்வாகிகள் இலியாஸ், எடத்தெரு பாபு, ராஜ்மோகன், இன்ஜினியர் ரமேஷ், நாட்ஸ் சொக்கலிங்கம், கருமண்டபம் சுரேந்தர், பாலக்கரை ரவீந்திரன், எடத்தெரு பார்த்திபன், அசோகன், சண்முகம், வாழைக்காய் மண்டி சுரேஷ், காசிபாளையம் சுரேஷ்குமார், அக்பர் அலி, வசந்தம் செல்வமணி, எ.புதூர் வசந்தகுமார், கிராப்பட்டி கமலஹாசன், டிபன் கடை கார்த்திகேயன், கிருஷ்ணமூர்த்தி, கீழக்கரை முஸ்தபா, ஜெகதீசன், கதிர்வேல், ரமணி லால், ஜெ.பேரவை கோழிக்கடை பாலு, முத்துக்குமார், ராமலிங்கம், ஜெயக்குமார், டைமன் தாமோதரன், ஐ.டி நாகராஜ், தென்னூர் ஷாஜகான், உறந்தை மணிமொழியன், உடையான்பட்டி செல்வம்,
கே.டி. அன்புரோஸ், கே.டி ஏ. ஆனந்தராஜ், ஆரி, செபா, அப்பாகுட்டி, குமார், பொன். அகிலாண்டம், தர்காகாஜா, கே.பி. ராமநாதன், ஒத்தக்கடை மகேந்திரன், மணிகண்டன், குருமூர்த்தி, வெல்லமண்டி கன்னியப்பன், சரவணன், கண்ணன், செல்லப்பன், என்.டி. மலையப்பன், ஈஸ்வரன், கல்லுக்குழி முருகன், மலைக்கோட்டை ஜெகதீசன், ஆவின் குணா, ரபீக் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்