தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருச்சி மாவட்டம் சார்பாக வக்பு வாரிய திருத்த மசோதாவை எதிர்த்து மக்கள் திரள் ஆர்ப்பாட்டம் திருச்சி பாலக்கரை ரவுண்டானாவில் இன்று(12-11-2024) மாவட்ட தலைவர் குலாம் தஸ்தஹீர் தலைமையில் நடைபெற்றது. பொருளாளர் லால் பாஷா, துணை தலைவர் காஜா, துணை செயலாளர் உமர், பிலால், கனி, மாலிக் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மாநில மேலாண்மை குழு உறுப்பினர் இ.முஹம்மது கலந்து கொண்டு கண்டன உரையாற்றினார். அப்போது அவர் பேசுகையில், வக்பு வாரிய திருத்தச்சட்டம் எனும் பெயரில் இஸ்லாமியர்களுக்கு தர்மமாக வழங்கப்பட்ட நிலங்களை அபகரிக்கும் முயற்சியில் மத்திய அரசாங்கம் ஈடுபட்டுள்ளது. வக்பு வாரியத்திற்கான அதிகாரங்களை முற்றிலும் அபகரித்து மாவட்ட ஆட்சியர்களுக்கு வழங்குவதென்பது முஸ்லீம் வெறுப்பு செயல்திட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்கான ஒரு வழிமுறையாகும் .
இஸ்லாமிய மக்களின் நலனுக்காக முன்னோர்கள் வழங்கிய லட்சக்கணக்கான ஏக்கர் நிலங்கள் பாஜக அரசின் கண்களை உறுத்துகின்றன. அவற்றை அபகரித்து அதானி, அம்பானி, உள்ளிட்டவர்களுக்கு வழங்குவதற்கும், ஊழல் செய்வதற்கும் பாஜக சதி செய்கிறது என்று கூறினார். போராட்டத்தின் முடிவில் மாவட்ட செயலாளர் ஜாஹீர் நன்றி கூறினார். ஆர்ப்பாட்டத்தில் திரளான இஸ்லாமியர்கள் கலந்து கொண்டனர்.

Comments are closed.