சட்டவிரோத சூதாட்ட செயலி விளம்பரத்தில் நடித்த பிரகாஷ்ராஜ், விஜய் தேவரகொண்டா, ராணா டகுபதி உள்ளிட்ட 29 நடிகர்கள் மீது அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது. நாடு முழுவதும் சூதாட்ட செயலியால் பணத்தை இழந்து, பலர் சிக்கலில் தவித்து வருகின்றனர். ஒரு சிலர் அதிக கடன் ஏற்பட்டு தற்கொலை செய்து கொண்டு உள்ளனர். இதனால் சூதாட்ட செயலிகளுக்கு விளம்பரம் தருவதையும், ஊக்கப்படுத்துவதையும் தடுக்க மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. சட்டவிரோத சூதாட்ட செயலிகளுக்கு நேரடியாகவும், மறைமுகமாகவும் ஆதரவு அளிப்போர் மீது நடவடிக்கை எடுக்கும்படி நுகர்வோர் துறை அமைச்சகம் உத்தரவிட்டு இருந்தது. ஆன்லைன் மூலம் விளம்பரங்களுக்கும் கட்டுப்பாடு விதிக்கப்பட்டு இருந்தது. இந்நிலையில், சட்டவிரோத சூதாட்ட செயலி விளம்பரத்தில் நடித்த பிரகாஷ்ராஜ், விஜய் தேவரகொண்டா, ராணா டகுபதி உள்ளிட்ட 29 நடிகர்கள் மீது அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது. இவர்கள் விசாரணைக்கு நேரில் ஆஜராக அமலாக்கத்துறை சம்மன் அனுப்ப திட்டமிட்டுள்ளது என தகவல்கள் தெரிவிக்கின்றன.
Comments are closed.