Rock Fort Times
Online News

திருச்சி,ஸ்ரீரங்கத்தில் துணிகரம் : ஓய்வு பெற்ற பெண் வங்கி ஊழியரிடம் தங்கச் சங்கிலி பறிப்பு

திருச்சி, ஸ்ரீரங்கம் சுதர்சன் நகர் பகுதியைச் சேர்ந்தவர் ரங்கநாதன். இவரது மனைவி யசோதரா தேவி (வயது 75).இவர் ஓய்வு பெற்ற சிண்டிகேட் வங்கி ஊழியர் . நேற்று காலை தனது வீட்டின் முன்பு யசோதரா தேவி கோலம் போட்டுக் கொண்டிருந்தார். அப்போது இருசக்கர வாகனத்தில் வந்த இரண்டு மர்மநபர்கள் திடீரென யசோதரா தேவியின் கழுத்தில் கிடந்த ஐந்து பவுன் தங்கச் சங்கிலியை பறித்துவிட்டு தப்பி ஓடிவிட்டனர். இதுகுறித்து யசோதரா தேவி திருவரங்கம் போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் சுப்பன் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்