ஸ்ரீரங்கத்தில் துணிகரம்: வீட்டின் பூட்டை உடைத்து 10 பவுன் நகை திருட்டு…
மர்ம ஆசாமிகளுக்கு வலைவீச்சு..
திருச்சி திருவானைக்காவல் மேல கொண்டயம்பேட்டை வள்ளுவர் தெருவை சேர்ந்தவர் ராஜகோபால். இவரது மனைவி ரெங்கநாயகி (வயது 83). சம்பவத்தன்று இவர் வீட்டை பூட்டிவிட்டு அருகில் உள்ள உறவினர் வீட்டிற்கு சென்றிருந்தார். இந்நிலையில் மர்ம ஆசாமிகள் வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே சென்று பூஜை அறையில் இருந்த 10 பவுன் நகையை திருடிக்கொண்டு ஓடிவிட்டனர். சிறிது நேரத்திற்கு பிறகு ரெங்கநாயகி வீட்டிற்கு வந்து பார்த்தபோது பூட்டு உடைக்கப்பட்டு வீட்டின் உள்ளே வைக்கப்பட்டிருந்த நகைகள் திருட்டுப் போய் இருந்தது கண்டு அதிர்ச்சி அடைந்தார். இந்த திருட்டு சம்பவம் குறித்து ரெங்கநாயகி ஸ்ரீரங்கம் போலீசில் புகார் கொடுத்தார். புகாரின்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து இந்த சம்பவத்தில் ஈடுபட்ட மர்ம ஆசாமிகளை வலைவீசி தேடி வருகின்றனர்.
Comments are closed, but trackbacks and pingbacks are open.