தமிழக மின்சார துறை அமைச்சர் செந்தில் பாலாஜி வீடு மற்றும் தலைமைச் செயலகத்தில் உள்ள அவரது அறை ஆகியவற்றில் அமலாக்கத்துறை அதிகாரிகள் நேற்று முன்தினம் சோதனை நடத்தினர். இந்த சோதனையின் அடிப்படையில் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டுள்ளார். இந்த நிலையில், அ.தி.மு.க. நிர்வாகிகள் ஏ. என்.ஜெயக்குமார், சி.வி.சண்முகம், விஜயபாஸ்கர், பெஞ்சமின் ஆகியோர் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியை சந்தித்து ஒரு மனு அளித்தனர். அதில் அமைச்சர் செந்தில் பாலாஜி விவகாரம், சட்டம்-ஒழுங்கு சீர் குலைவு போன்ற விவரங்கள் குறிப்பிடப்பட்டு இருந்தன. குறிப்பாக அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டுள்ள செந்தில் பாலாஜியை தமிழக அமைச்சரவையில் இருந்து நீக்க வேண்டும் என கோரி இருந்தனர். இதைத்தவிர முறைகேடாக ரூ.30 ஆயிரம் கோடி சேர்த்ததாக வெளியான ஆடியோ குறித்த விசாரணைக்கு உத்தரவிடுமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டிருந்தது.
Comments are closed, but trackbacks and pingbacks are open.