முன்னாள் முதல் அமைச்சர் ஓ.பன்னீர் செல்வத்தை அதிமுகவில் சேர்க்க முடியாது என்று எடப்பாடி பழனிசாமி திட்டவட்டமாக கூறிவிட்டார். அவரது ஆதரவாளர்களும் மாற்று கட்சிக்கு சென்று விட்டனர். ஒரு சிலர் மட்டுமே அவரிடம் உள்ளனர். இதனால், ஓ.பன்னீர் செல்வத்தின் அடுத்த கட்ட நடவடிக்கை என்னவாக இருக்கும் என்று அரசியல் வட்டாரத்தில் உன்னிப்பாக பார்க்கப்பட்டு வருகிறது. ஓ.பன்னீர் செல்வம் தனிக்கட்சி தொடங்கலாம் என்றும், விஜய் கட்சியில் இணையலாம் என்றும் பரவலாக பேசப்பட்டு வருகிறது. இந்நிலையில், இன்று( ஜன. 10) செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த ஓ. பன்னீர் செல்வத்திடம் தேர்தல் நிலைப்பாடு தொடர்பாக செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு பதிலளித்த அவர், தை பிறந்தால் வழி பிறக்கும்” என்றார். தவெக உடன் கூட்டணி வைப்பீர்களா? என்று கேட்டதற்கு பதிலளிக்காமல் சென்றுவிட்டார்.

Comments are closed.