Rock Fort Times
Online News

திருவானைக்கோவில் ஆடிப்பூரம் தெப்ப உற்சவ விழா கொடியேற்றம்

திருவானைக்கோவில் அருள்மிகு ஜம்புகேஸ்வரர் அகிலாண்டேஸ்வரி திருக்கோயிலில் ஆடிப்பூரம் உற்சவ விழா கொடியேற்றத்துடன் இன்று தொடங்கியது. இதனைத் தொடர்ந்து அம்மன் சிறப்பு அலங்காரத்தில் எழுந்துருளி பக்தர்களுக்கு காட்சி தந்தார் . அம்மன் ஒவ்வொரு நாளும் பல்வேறு வாகனங்களில் எழுந்துருளி நான்காம் பிரகாரத்தில் வலம் வந்து பக்தர்களுக்கு காட்சி தருகிறார் .

இதில் முக்கிய நிகழ்வான ஆடிப்பூர தெப்பம் வரும் 24ஆம் தேதி சூரிய தீர்த்த தெப்பக்குளத்தில் நடைபெற உள்ளது. விழாவிற்கான ஏற்பாடுகளை கோயில் உதவி ஆணையர் ஆ. ரவிச்சந்திரன் மற்றும் கோயில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்

Comments are closed, but trackbacks and pingbacks are open.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்