திருச்சிராப்பள்ளி மாவட்ட ஆட்சித் தலைவர் மா.பிரதீப்குமார் ஐ.ஏ.எஸ் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்-
2022-2023 ஆம் கல்வியாண்டில் ஆதிதிராவிடர் நலத்துறையின் கல்வி உதவி தொகை வழங்கப்பட உள்ளது. அந்தத் தொகையை பெற்றுக் கொள்ள ஒவ்வொரு மாணவ மாணவியரும் வங்கிக் கணக்கு தொடங்க வேண்டும். ஆதார் இணைப்புடன் கூடிய வங்கி கணக்கு இல்லாத மாணாக்கர்களுக்கு, அஞ்சல்துறையின் கீழ் செயல்படும் இந்தியா போஸ்ட பேமெண்ட்ஸ் வங்கியின் (IPPB) மூலம், பள்ளிகளிலேயே ஆதார் இணைப்புடன் கூடிய வங்கி கணக்கு துவங்க சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. தற்போது பள்ளிகளுக்கு கோடை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதால், ஆதார் இணைப்புடன் கூடிய வங்கிக் கணக்கு இல்லாத மாணாக்கர்கள் அருகிலுள்ள அஞ்சலகம் மற்றும் தபால்காரருக்கு வழங்கப்பட்டுள்ள ஸ்மார்ட் போன் மற்றும் பயோமெட்ரிக் சாதனத்தின் மூலம், மாணாக்கர்களின் ஆதார் மற்றும் மொபைல் எண்ணை பயன்படுத்தி e-KYC (விரல் ரேகை) மூலம் Zero Balance வங்கி கணக்கு துவங்கி பயன் பெற்றுக் கொள்ளலாம். இவ்வாறு திருச்சிராப்பள்ளி மாவட்ட ஆட்சித்தலைவர் மா.பிரதீப் குமார் ஐ.ஏ.எஸ் அந்த செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார்.

Comments are closed, but trackbacks and pingbacks are open.