Rock Fort Times
Online News

கர்நாடக அணைகளில் இருந்து கூடுதல் தண்ணீர் திறப்பு…- திருச்சி உட்பட 11 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை…!

கர்நாடகாவில் மழை தீவிரம் அடைந்து உள்ளதால் அங்குள்ள கிருஷ்ணராஜசாகர் மற்றும் கபினி அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்து உள்ளது. 2 அணைகளில் இருந்து மொத்தம் 95ஆயிரம் கனஅடி தண்ணீர் காவிரி ஆற்றில் திறக்கப்பட்டு உள்ளது. எனவே அந்த தண்ணீர் மேட்டூர் அணைக்கு விரைவில் வர தொடங்கி அணை மீண்டும் இந்த ஆண்டில் 5-வது முறையாக நிரம்பும் வாய்ப்பு உள்ளது. இதையடுத்து உபரிநீர் எந்த நேரத்திலும் மேட்டூர் அணையில் இருந்து காவிரி ஆற்றில் 50ஆயிரம் கனஅடி முதல் 70ஆயிரம் கனஅடி வரை திறந்து விடப்படலாம். இதுதொடர்பாக நீர்வளத்துறை சார்பில் காவிரி கரையோரம் உள்ள சேலம், நாமக்கல், ஈரோடு, கரூர், திருச்சி, தஞ்சாவூர், நாகை உள்பட 11 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது. மேலும் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்