திருவெறும்பூர் சட்டமன்ற தொகுதியில் 2 அரசு பள்ளிகளில் கூடுதல் கட்டிடங்கள்: * காணொளி காட்சி மூலம் திறந்து வைத்தார், முதல்வர் மு.க.ஸ்டாலின்…!
திருச்சி மாவட்டத்தில் 2024–25ம் ஆண்டு நிதியாண்டின் கீழ் ஆதிதிராவிடர் மேல்நிலைப்பள்ளிகளில் கட்டி முடிக்கப்பட்ட கூடுதல் கட்டிடங்களை காணொளி காட்சி மூலம் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (அக்.6) திறந்து வைத்தார். அந்தவகையில்
திருவெறும்பூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட திருச்சி மாநகராட்சி காட்டூர் ஆதிதிராவிடர் பெண்கள் மேல்நிலைப்பள்ளி மற்றும் திருவெறும்பூர் தெற்கு ஒன்றியத்துக்குட்பட்ட சோழமாதேவி ஊராட்சியில் அமைந்துள்ள ஆதிதிராவிடர் மேல்நிலைப்பள்ளிகளில் 6 வகுப்பறைகள், 2 கணினி ஆய்வகம், 1 அறிவியல் ஆய்வகம் , பொருட்கள் பாதுகாப்பு அறை 1 என மொத்தம் ரூ.2 கோடியே 57 லட்சம் மதிப்பீட்டில் கட்டி முடிக்கப்பட்ட புதிய கட்டிடங்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். அதனைத்தொடர்ந்து அந்த கட்டிடங்களை திருவெறும்பூர் சட்டமன்ற உறுப்பினரும், பள்ளிக்கல்வித்துறை அமைச்சருமான அன்பில் மகேஸ் பொய்யாமொழி ஆய்வு செய்தார். அப்போது மாநகராட்சி மண்டல குழு தலைவர் மு.மதிவாணன், திருச்சி மாவட்ட செயற்பொறியாளர் தாட்கோ நவநீதகிருஷ்ணன், மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலர் சிவா, திருவெறும்பூர் வட்டாட்சியர் தனலெட்சுமி, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ஆனந்த் மற்றும் அண்ணாதுரை, திருவெறும்பூர் தெற்கு ஒன்றிய செயலாளர் கங்காதரன், பகுதி செயலாளர் நீலமேகம், மாமன்ற உறுப்பினர் தாஜுதீன், காட்டூர் ஆதிதிராவிடர் மேல்நிலைப் பள்ளியின் தலைமை ஆசிரியர் தேன்மொழி மற்றும் சோழமாதேவி ஆதிதிராவிடர் மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் வசந்தகுமாரி ஆகியோர் உடனிருந்தனர்.
Comments are closed.