Rock Fort Times
Online News

நடிகை விஜயலட்சுமி புகார்: சீமானுக்கு போலீஸ் சம்மன்…

‘பிரண்ட்ஸ்’ படத்தில் நடித்த நடிகை விஜயலட்சுமி சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் ஏற்கனவே ஒரு புகார் மனு அளித்தார். அதில் எனக்கும், இயக்குனரும், நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளருமான சீமானுக்கும் பழக்கம் ஏற்பட்டது. அவர் என்னை திருமணம் செய்து ஏமாற்றி விட்டார். பின்னர் அவர் வேறு பெண்ணை திருமணம் செய்து கொண்டார். என்னுடன் பழகி ஏமாற்றிய சீமான் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தார்.
இந்தப் புகார் மீது வளசரவாக்கம் போலீசார் விசாரணை நடத்தும்படி உத்தரவிடப்பட்டது. அதைத் தொடர்ந்து சீமான் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. ஆனால், போலீசார் இந்த வழக்கில் எந்த மேல் நடவடிக்கையும் எடுக்கவில்லை. இந்தநிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் சீமான் மீது மீண்டும் நடிகை விஜயலட்சுமி புகார் செய்தார். இந்தப் புகார் மீது போலீசார் விசாரணையை மேற்கொண்டனர். கோயம்பேடு துணை கமிஷனர் உமையாள் தலைமையில் வளசரவாக்கம் மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் தலைமையிலான தனிப்படை போலீசார் நடிகை விஜயலட்சுமியிடம் 6 மணி நேரம் விசாரணை நடத்தினர். இந்த விசாரணையைத் தொடர்ந்து, திருவள்ளூர் மகளிர் நீதிமன்றத்தில் நடிகை விஜயலட்சுமி வாக்குமூலம் அளித்தார். ஏற்கனவே சீமானால் 7 முறை கருக்கலைப்பு செய்ததாக விஜயலட்சுமி கூறியிருந்தார். இந்த வாக்குமூலத்தின் அடிப்படையில், சீமானிடம் போலீசார் விசாரணை நடத்த முடிவு செய்துள்ளனர். இதற்காக போலீஸ் நிலையத்தில் ஆஜராகும்படி சீமானுக்கு போலீசார் சம்மன் அனுப்பினர். இந்த சம்மனை ஏற்றுக்கொண்ட அவர், வருகிற 12-ம் தேதி(செவ்வாய்கிழமை) ஆஜராவதாக பதில் அளித்துள்ளார். போலீசார் விசாரணையில், விஜயலட்சுமியுடன் பழகியதோடு அவரது கருக்கலைப்புக்கு அவர் காரணம் என்று தெரியவந்தாலோ, திருமணம் செய்து ஏமாற்றியது தெரியவந்தாலோ அவர் கைது செய்யப்படலாம் என்ற பரபரப்பு எழுந்துள்ளது.

Comments are closed, but trackbacks and pingbacks are open.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்