தமிழ் திரையுலகில் நகைச்சுவை நடிகராக வலம் வருபவர் யோகி பாபு. இவர் இன்று(16-02-2025) அதிகாலை 3 மணி அளவில் சென்னை- பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் காரில் சென்று கொண்டிருந்தார். அவரது கார் வாலாஜாபேட்டை சுங்கச்சாவடியை கடந்தபோது, திடீரென ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து நெடுஞ்சாலை நடுவே உள்ள தடுப்பு மீது ஏறி விபத்துக்குள்ளானது. இதில் எவ்வித காயமும் இன்றி நடிகர் யோகிபாபு அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். பின்னர் வேறு காரை வரவழைத்து அங்கிருந்து சென்றுள்ளார். விபத்தில் சிக்கிய நடிகர் யோகி பாபுவின் காரை நெடுஞ்சாலைத்துறை ரோந்து போலீசார், நீண்ட நேரம் போராடி அப்புறப்படுத்தினர். நடிகர் யோகி பாபுவின் கார் விபத்தில் சிக்கிய சம்பவம் தமிழ் திரையுலகினர் மற்றும் ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
Comments are closed.