நடிகர் யாஷ் 38வது பிறந்தநாளை உலகம் முழுவதிலும் உள்ள அவரது ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். இந்நிலையில் கர்நாடக மாநிலம் கடக் பகுதியில் உள்ள சுருங்கி கிராமத்தில் நடிகர் யாஷ் ரசிகர் மன்ற சார்பில் அவரது பிறந்தநாளை முன்னிட்டு கட் அவுட் வைத்து மாலையிட ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதற்காக நேற்று இரவு கட் அவுட் அமைக்கும் பணியில் அவரது ரசிகர்கள் ஈடுபட்டு வந்தனர். அப்போது கட் அவுட் நிறுத்தி வைக்கும்போது மேலே இருந்த மின்கம்பிகள் உரசியதில் 4 பேருக்கு மின்சாரம் பாய்ந்தது. அவர்களை காப்பற்ற சென்ற மேலும் இருவருக்கும் மின்சாரம் தாக்கியது. மின்சாரம் தாக்கியதில் ஹனுமந்த் (24), முரளி (20), நவீன் (20) ஆகிய 3 பேர் உடல் கருகி சம்பவ இடத்திலேயே பலியாகினர். மேலும் 3 பேருக்கு மின்சாரம் தாக்கியதில் தீக்காயம் ஏற்பட்டது. காயமடைந்தவர்கள் மருத்துமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். உயிரிழந்த மூவரின் உடல்களையும் போலீசார் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
Comments are closed, but trackbacks and pingbacks are open.