தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் விஜய், தன்னுடைய மக்கள் இயக்கம் மூலம் மக்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை செய்து வருகிறார். இந்த நிலையில் அரசியலில் கால் பதிக்கும் வகையில் விஜய் மக்கள் இயக்கத்தை, தமிழக வெற்றிக் கழகமாக மாற்றி தேர்தல் ஆணையத்தில் அரசியல் கட்சியாக பதிவு செய்துள்ளார். ஆனால், இந்த ஆண்டு நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலில் தனது கட்சி போட்டியிடாது என்றும், 2026ம் ஆண்டு நடைபெற உள்ள தமிழக சட்டமன்றத் தேர்தல்தான் தன்னுடைய இலக்கு என்றும் விஜய் தெரிவித்துள்ளார். தமிழக சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் இரண்டு ஆண்டுகள் இருப்பதால் அதற்குள் கட்சியை பலப்படுத்த விஜய் முடிவு செய்துள்ளார். இதற்காக கட்சி நிர்வாகிகளை அடிக்கடி சந்தித்து பேசி வருகிறார். இந்நிலையில், தமிழக வெற்றிக் கழகத்தின் நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நாளை(19-02-2024) நடக்க உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதுகுறித்து அக்கட்சியின் பொதுச்செயலாளர் என்.ஆனந்த் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் உத்தரவின்பேரில் உறுப்பினர் சேர்க்கை மற்றும் உட்கட்சிக் கட்டமைப்பு விரிவாக்கம் தொடர்பான நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் சென்னை பனையூரில் உள்ள தலைமை நிலையச் செயலக அலுவலகத்தில் நாளை காலை 9 மணி அளவில் நடைபெற உள்ளது. கூட்டத்தில் கட்சியின் மாவட்டத் தலைமை நிர்வாகிகள் தவறாமல் கலந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன்எனத் தெரிவித்துள்ளார்.
Comments are closed, but trackbacks and pingbacks are open.