தொடர் விடுமுறையை பயன்படுத்தி அதிக கட்டணம் வசூலித்தால் நடவடிக்கை:* ஆம்னி பேருந்துகளுக்கு அரசு அதிகாரி எச்சரிக்கை!
தொடர் விடுமுறையை பயன்படுத்தி அதிக கட்டணம் வசூலித்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என ஆம்னி பேருந்து நிர்வாகத்தினருக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக போக்குவரத்து மற்றும் சாலைப்பாதுகாப்பு ஆணையர் வெளியிட்டுள்ள அறிக்கையில், நாளை (05.09.2025) வெள்ளிக்கிழமை மிலாது நபி மற்றும் தொடர் வார விடுமுறையை முன்னிட்டு பொதுமக்கள் வெளியூர் பயணம் மேற்கொள்வதைப் பயன்படுத்தி தனியார் ஆம்னி பேருந்துகள் அதிகப்படியான கட்டணம் வசூல் செய்தால் அதனைத் தடுக்க தமிழ்நாடு முழுவதும் வட்டாரப்போக்குவரத்து அலுவலர்கள், மோட்டார் வாகன ஆய்வாளர்கள் மற்றும் போக்குவரத்து சோதனைச்சாவடி ஆய்வாளர்கள் ஆகியோரைக் கொண்ட சிறப்புக்குழு அமைக்கப்பட்டுள்ளது. அதிகப்படியான கட்டணம் வசூல் செய்யும் மற்றும் அனுமதிக்குப் புறம்பாக இயங்கும் ஆம்னி பேருந்துகளை தீவிரமாக சோதனை செய்து அபராதம் விதிக்கவும், வாகனங்களை சிறைபிடித்து வரி வசூல் செய்யவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.” இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Comments are closed.