பொறியியல் பணிகள் காரணமாக மயிலாடுதுறை ரயில்களின் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து திருச்சி கோட்ட ரயில்வே நிர்வாகம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள ஒரு செய்தி குறிப்பில், மயிலாடுதுறை பிரிவில் பொறியியல் பணிகள் நடைபெறுவதால் மன்னார்குடி – மயிலாடுதுறை – மன்னார்குடி பயணிகள் ரயில்களானது (06403, 06404) வருகிற 7, 22 ஆகிய தேதிகளில் முழுமையாக ரத்து செய்யப்படுகிறது. அதேபோல, திருச்சியிலிருந்து காலை 6 மணிக்கு புறப்படும் திருச்சி. மயிலாடுதுறை பயணிகள் ரயிலானது (06646) வருகிற 13-ம் தேதி மயிலாடுதுறை- குத்தாலம் இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது. இந்த ரயிலானது திருச்சி-குத்தாலம் வரை மட்டுமே இயக்கப்படும். மேலும், விழுப்புரத்திலிருந்து காலை 5 மணிக்கு புறப்படும் விழுப்புரம்- மயிலாடுதுறை பயணிகள் ரயிலானது (06689) வருகிற 7, 22-ம் தேதிகளில் மயிலாடுதுறை – ஆனதாண்டவபுரம் இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது. இந்த ரயிலானது விழுப்புரம் ஆனதாண்டவபுரம் இடையே மட்டும் இயக்கப்படும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Comments are closed.