தெய்வங்கள் எல்லாம் தோற்றே போகும்…என்ற பாடல் வரிகளுக்கு ஏற்ப ஒரு தந்தை எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு உதாரணமாக திகழும் ஆட்டோ டிரைவர்…! (வீடியோ இணைப்பு)
ஆட்டோ டிரைவர்கள் என்றாலே கரடு முரடானவர்கள், சவாரி பேசிவிட்டு வேண்டாம்…என்று சென்றால் வசை பாடுவார்கள் என்றெல்லாம் நாம் கேள்விப்பட்டு இருக்கிறோம். கல்லுக்குள் ஈரம் இருப்பது போல அவர்களுக்குள்ளும் சில நல்லவர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள். அப்படி ஒரு நல்ல ஆட்டோ டிரைவர் பற்றிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அவர் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர் அல்ல, வடமாநிலத்தை சேர்ந்தவர். அவரது ஆட்டோவில் ஐந்து வயது நிரம்பிய ஒரு சிறுமி ஆட்டோவின் பின் இருக்கையில் தூங்கிக் கொண்டு இருக்கிறது. ஒரு நாள் இரண்டு நாள் அல்ல தினமும் அந்த சிறுமியை அவர் ஆட்டோவில் ஏற்றிக்கொண்டு வந்துவிடுகிறார். ஆட்டோவில் சவாரி பேச வந்த ஒருவர், ஆட்டோ டிரைவரிடம் அந்த சிறுமி குறித்து விசாரித்த போது, அது என் மகள் தான் சார். என் மனைவி இறந்து போயிட்டாங்க… வீட்டில் பார்த்துக்கொள்ள யாரும் இல்லை. தனியாக விட்டு விட்டு வரவும் மனமில்லை, அதான் சார்… தினமும் ஆட்டோவில் அழைத்து வந்துவிடுகிறேன் என்று சொன்னார். ஆட்டோவின் இரைச்சல், மேடு,பள்ளங்கள் அனைத்தும் என் குழந்தைக்கு பழகிப் போய்விட்டது என்று சொல்லி முடித்தார். இதனைக் கேட்டு கண் கலங்கிய அந்த பயணி அவரையும், அந்த சிறுமியையும் ஹோட்டலுக்கு அழைத்துச் சென்று உணவு வாங்கி கொடுக்கிறார். பின்னர் அவர்களுக்கு பிரியா விடை அளித்துவிட்டு புறப்பட்டு செல்கிறார் அந்த பயணி.
மனைவி இறந்த அடுத்த ஒரு மாதத்திலோ, இரண்டு மாதத்திலோ திருமணம் செய்து கொள்ளும் பல ஆண்கள் மத்தியில் இந்த ஆட்டோ டிரைவர் தனது குழந்தையை எப்படியாவது கஷ்டப்பட்டு வளர்க்க வேண்டும் என்று தனது ஆட்டோவில் அழைத்துச் செல்வது வீடியோவை பார்க்கும் பலரையும் கலங்கடித்து வருகிறது. ஒரு தந்தை எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு உதாரணம் நீங்கள் தான்… தெய்வங்கள் எல்லாம் தோற்றே போகும் தந்தை உங்கள் அன்பின் முன்னே… என்று அந்த வீடியோவை பார்க்கும் பலரும் தங்களது கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

Comments are closed.