தஞ்சை மாவட்டம், பட்டுக்கோட்டை வளவன் புறத்தை சேர்ந்தவர் செந்தில்குமார் வயது (49). இவர் பட்டுக்கோட்டை காவல் துறை தனிப்பிரிவு குற்றப்புலனாய்வுத்துறை சப்- இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து வந்தார். தஞ்சையில் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி பாதுகாப்பு பணிக்கு சென்று இருந்தார். பின்னர் மோட்டார் சைக்கிளில் பட்டுக்கோட்டை நோக்கி சென்று கொண்டிருந்தார். பாப்பாநாடு அருகே சென்றபோது ஒரத்தநாடு தாலுக்கா கண்ணுகுடி மேற்கு கிராமத்தில் இருந்து தேங்காய் ஏற்றிக்கொண்டு பட்டுக்கோட்டை நோக்கி சென்று கொண்டிருந்த லாரி ஒன்று மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில், படுகாயம் அடைந்த சப்-இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து உயிரிழந்த செந்தில்குமார் உடலை மீட்டு பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த விபத்து குறித்து வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். விபத்தில் மரணம் அடைந்த செந்தில் குமாருக்கு இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Comments are closed.