விபத்தில்லா தமிழ்நாடு: திருச்சியில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி…- மாவட்ட ஆட்சியர் தொடங்கி வைத்தார்..!
திருச்சி மாவட்ட ஆட்சியரகத்தில் இன்று (22.12.2025) தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம், (கும்பகோணம் லிட்) திருச்சிராப்பள்ளி மண்டலத்தின் சார்பில் “விபத்தில்லா தமிழ்நாடு” என்பதை வலியுறுத்தும் விதமாக பொதுமக்களுக்கு சாலை பாதுகாப்பு ஏற்படுத்தும் வகையில், சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணியை மாவட்ட ஆட்சித்தலைவர் வே. சரவணன், கொடியசைத்து தொடங்கி வைத்தார். இந்நிகழ்வில் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் திருச்சிராப்பள்ளி மண்டல பொது மேலாளர் சதீஷ்குமார், துணை மேலாளர்கள் ராமநாதன், புகழேந்திராஜ், கார்த்திகேயன், வட்டார போக்குவரத்து அலுவலர்கள் ப. சுரேஷ்பாபு, த. நடராஜன், போக்குவரத்துத்துறை மற்றும் காவல் துறை அலுவலர்கள், பேராசிரியர்கள், பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள், அரசு அலுவலர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Comments are closed.