Rock Fort Times
Online News

ஆளுநர் பங்கேற்ற நிகழ்வில் ஏசி கேஸ் கசிவு!

கோவையில் ஆளுநர் பங்கேற்ற நிகழ்வில் ஏசி மிஷினில் இருந்து கேஸ் வெளியேறியதால் சிறிது நேரம் சலசலப்பு ஏற்பட்டது. கோவை சரவணம்பட்டி பகுதியில் கே.ஜி அறக்கட்டளை சார்பில் டைனமிக் இந்தியன் ஆஃப் தி மில்லெனியம் விருது வழங்கும் நிகழ்ச்சி தற்போது நடைபெறுகிறது. இதில் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி பங்கேற்றுள்ளார். நிகழ்ச்சி தொடங்கியதும் தமிழ்தாய் வாழ்த்து பாடிக் கொண்டிருக்கும் நேரத்தில் மாணவர்கள் அமர்ந்திருந்த பகுதியில் இருந்த ஏசி மிஷினில் இருந்து திடீரென சப்தத்துடன் கேஸ் வெளியேறியுள்ளது. இதனால் அங்கிருந்த மாணவர்கள் பதற்றத்திற்குள்ளான நிலையில் உடனடியாக ஏசி மிஷின் நிறுத்தப்பட்டு அங்கிருந்த மாணவர்கள் வேறு இடத்தில் அமர வைக்கப்பட்டனர். பின்னர் நிகழ்ச்சி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இச்சம்பவத்தால் அரங்கில் சிறிது நேரம் சலசலப்பு நிலவியது.

Leave A Reply

Your email address will not be published.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்