முன்பெல்லாம் தேர்தல் என்றாலே நடந்து சென்று வாக்கு சேகரிப்பார்கள். காலப்போக்கில் வாகனங்களில் சென்று வாக்கு சேகரிக்க தொடங்கினர். தற்போது வாக்காளர்களை கவர்வதற்காக புதிது புதிதாக யோசித்து டீக்கடைக்குள் சென்று டீ போட்டுக் கொடுத்து வாக்கு சேகரிப்பது, உணவகத்திற்கு சென்று தோசை, பரோட்டா போட்டுக் கொடுத்து வாக்கு சேகரிப்பில் ஈடுபடுகின்றனர். இதுபோன்ற யுக்தி இங்குதான் கடைபிடிக்கப்படுகிறது என்றால் அமெரிக்க தேர்தலிலும் கடைபிடிக்கப்படுவது ஆச்சரியத்தை ஏற்படுத்தி இருக்கிறது. ஆம்! அமெரிக்க தேர்தலை ஒட்டி வாக்கு சேகரிப்பின் ஒரு பகுதியாக மெக்டொனல்ஸ் உணவகத்திற்கு சென்று சமையல் செய்து கொடுத்து வாக்கு சேகரித்தார் முன்னாள் அதிபர் டொனல்ட் டிரம்ப். இது நன்றாகவே “ஒர்க் அவுட்” ஆகிறது என்கிறார்கள் அங்குள்ள அரசியல் புள்ளிகள். அந்த வீடியோவை தான் இங்கே காண்கிறீர்கள்.

Comments are closed.