திருச்சி கே.சாத்தனூர் வடுகபட்டி பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்தவர் கோவிந்தராஜ், இவரது மனைவி நாகலட்சுமி (வயது 26). சம்பவத்தன்று இருவரும் நாகமங்கலம் சென்று விட்டு மோட்டார் சைக்கிளில் வீட்டுக்கு திரும்பி கொண்டு இருந்தனர். திருச்சி- மதுரை சாலையில் தனியார் பொறியியல் கல்லூரி அருகே வந்தபோது அவர்களை பின் தொடர்ந்து மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம ஆசாமிகள் 2 பேர், கோவிந்தராஜை வழிமறித்து நாகலட்சுமியை தாக்கி கழுத்தில் அணிந்திருந்த 2 பவுன் நகையை பறித்துக் கொண்டு தப்பி விட்டனர். இந்த சம்பவத்தில் காயமடைந்த நாகலட்சுமி திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்து எடமலைப்பட்டிபுதூர் போலீசில் நாகலட்சுமி கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து நகையை பறித்து சென்ற மர்ம ஆசாமிகளை வலை வீசி தேடி வருகின்றனர்.

Comments are closed, but trackbacks and pingbacks are open.