Rock Fort Times
Online News

திருச்சி, பொன்மலையில் வரதட்சணை கொடுமையால் தூக்க மாத்திரைகளை தின்று தற்கொலைக்கு முயன்ற பெண் மருத்துவமனையில் அனுமதி…!

திருச்சி, பொன்மலை கணேசபுரம் பகுதியில் வசித்து வருபவர் ராமச்சந்திரன். தனியார் நிறுவனம் ஒன்றில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி காந்திமதி (33). இருவருக்கும் திருமணமாகி 10 ஆண்டுகள் ஆன நிலையில் கணவர் குடும்பத்தினர் காந்திமதியிடம் வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தி வந்ததாக கூறப்படுகிறது. இந்தநிலையில் இன்று( மார்ச் 30) கணவர் வீட்டில் இல்லாத நிலையில் காந்திமதியிடம் அவரது மாமனார் முருகையன், மாமியார் லெட்சுமி, கணவரின் சகோதரிகள் ஆகியோர் சேர்ந்து கொண்டு வரதட்சணை கேட்டு கொடுமை செய்ததுடன் வீட்டை காலி செய் என மிரட்டி தாக்க முற்பட்டனர். இதனால், பயந்த காந்திமதி வீட்டின் உள்ளே சென்று கதவை சாத்திக் கொண்டு 15க்கும் மேற்பட்ட தூக்க மாத்திரைகளை தின்றுவிட்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார். இதில், மயங்கி கிடந்த அவரை அருகில் உள்ளவர்கள் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலமாக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்த தகவலின் பேரில் காந்திமதியின் கணவர் மருத்துவமனைக்கு விரைந்து வந்தார். இதுகுறித்து பொன்மலை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்