பயணிகளின் கூடுதல் நெரிசலை குறைக்க, தென்மேற்கு ரெயில்வே கர்நாடக மாநிலம் ஹூப்ளி மற்றும் தஞ்சை ஜங்ஷன் இடையே வாராந்திர சிறப்பு விரைவு ரெயில்களை இயக்க அறிவித்துள்ளது
அதன்படி வண்டி எண் 07326 தஞ்சை ரெயில் நிலையத்தில் இருந்து -கர்நாடக மாநிலம் ஹூப்ளிக்கு வாராந்திர சிறப்பு ரெயில் தஞ்சையில் இருந்து நாளை மறுநாள் (செவ்வாய்க்கிழமை) 21-ந்தேதி, அடுத்த மாதம் 4, 11, 18, 25-ந்தேதி ஆகிய நாட்களில் இரவு 7.40 மணிக்கு புறப்பட்டு மறுநாள் மதியம் 12.30 மணிக்கு ஹூப்ளியை சென்றடையும். இந்த ரெயில் செவ்வாய்க்கிழமை மட்டும் இயங்கும். இதேபோல் மறுமார்க்கமாக வண்டி எண் 07325 கர்நாடக மாநிலம் ஹூப்ளியில் இருந்து திருச்சி வழியாக தஞ்சைக்கு வாராந்திர சிறப்பு ரெயில் நாளை (திங்கட்கிழமை) 20-ந்தேதி, அடுத்த மாதம் (ஏப்ரல்) 3, 10, 17 மற்றும் 24 ஆகிய தேதிகளில் இரவு 8.25 மணிக்கு ஹூப்ளியில் இருந்து புறப்பட்டு தஞ்சை ரெயில் நிலையத்தை மறுநாள் பிற்பகல் 2.15 மணிக்கு சென்றடையும். இந்த ரெயில் திங்கட்கிழமை மட்டும் இயங்கும். இந்த சிறப்பு ரெயில் எஸ்.எம்.எம். ஹாவேரி, ராணிபென்னூர், ஹரிஹர், தாவாங்கேரே, பிரூர் ரெயில்வே ஜங்ஷன், அர்சிகெரே ரெயில்வே ஜங்ஷன், துமகுரு, சிக்க பனாவரா ரெயில்வே ஜங்ஷன், சர்.எம். விஸ்வேஸ்வரா டெர்மினல் பெங்களூரு வழியாக கிருஷ்ணராஜபுரம், பங்காரப்பேட்டை ரெயில்வே ஜங்ஷன், சேலம் ரெயில்வே ஜங்ஷன், கரூர் ரெயில்வே ஜங்ஷன், திருச்சி ரெயில்வே ஜங்ஷன் மற்றும் பூதலூர் உள்ளிட்ட இடங்களில் நின்று செல்லும். இந்த ரெயில் ஒரு ஏசி 2-அடுக்கு பெட்டிகள், 3 ஏசி 3-அடுக்கு பெட்டிகள், 9 படுக்கை வசதி கொண்ட பெட்டிகள், 5 இரண்டாம் வகுப்பு பெட்டிகள் மற்றும் 2 பொது இரண்டாம் வகுப்பு பெட்டிகள் மற்றும் சரக்கு வேன்கள் ஆகிய பெட்டிகளுடன் இயங்கும்