திருச்சியில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இ.பி.எஸ்.க்கு சிறப்பான வரவேற்பு…* திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட அதிமுக கூட்டத்தில் முடிவு!
தமிழக சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் குறைந்த மாதங்களே இருப்பதால் “மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம்” என்ற பெயரில் அதிமுக பொதுச் செயலாளரும், முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி பழனிசாமி தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். அந்தவகையில் திருச்சி மாவட்டத்தில் இந்த மாத இறுதியில் இபிஎஸ் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். இதுதொடர்பாக திருச்சி புறநகர் வடக்கு மாவட்டத்திற்கு உட்பட்ட ஸ்ரீரங்கம், முசிறி, துறையூர், மண்ணச்சநல்லூர் ஆகிய சட்டமன்ற தொகுதி நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு முன்னாள் அமைச்சரும், வடக்கு மாவட்ட கழக செயலாளருமான மு.பரஞ்ஜோதி தலைமை தாங்கினார். கூட்டத்தில் எம்ஜிஆர் இளைஞர் அணி செயலாளர், முன்னாள் அமைச்சர் என்.ஆர்.சிவபதி, அமைப்புச் செயலாளர் முன்னாள் அரசு கொறடா ஆர்.மனோகரன், அமைப்பு செயலாளர், முன்னாள் அமைச்சர் வளர்மதி, சிறுபான்மையினர் நலப்பிரிவு மாநில துணை செயலாளர் புல்லட்ஜான், ஜெ.பேரவை மாநில துணைச் செயலாளர் ஸ்ரீதர், முன்னாள் அமைச்சர்கள் ப.அண்ணாவி, டி.பி.பூனாட்சி, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் எம்.செல்வராசு, இந்திராகாந்தி, மல்லிகா சின்னச்சாமி, முன்னாள் மாவட்ட கழக செயலாளர் சுப்பு (எ) சுப்ரமணியன், அவைத் தலைவர் சமயபுரம் ராமு, மாவட்ட பொருளாளர் சேவியர், துணைச் செயலாளர் கோவிந்தராஜ், பொதுக்குழு உறுப்பினர்கள் மண்ணை அ.திருநாவுக்கரசு, துறையூர் சரோஜா, பிரியா சிவக்குமார், மாவட்ட சார்பு அணி செயலாளர்கள் எம்ஜிஆர் மன்றம் அறிவழகன் விஜய், பேரவை அய்யம்பாளையம் ரமேஷ், மீனவரணி பேரூர் கண்ணதாசன், இளைஞரணி பூக்கடை குரு, மாணவரணி அறிவழகன், தகவல் தொழில்நுட்ப பிரிவு மண்டல இணைச் செயலாளர் திருப்புகழ் செல்லத்துரை, தகவல் தொழில்நுட்ப பிரிவு ஏவூர் நாகராஜன், அமைப்புசாரா ஓட்டுனர் அணி சுந்தரமூர்த்தி, கலைப் பிரிவு அன்னை கோபால் மற்றும் ஒன்றிய, நகர கழக செயலாளர்கள் முத்து கருப்பன், கோப்பு நடராஜ், கடிகை ராஜகோபால், ஆமூர் ஜெயராமன், ஆதாளி ஜெயக்குமார், பகுதி கழக செயலாளர்கள் டைமண்ட் திருப்பதி, சுந்தர்ராஜன், இளைஞர் அணி தேவா, புங்கனூர் கார்த்திக், பேரூராட்சி கழக செயலாளர்கள் மற்றும் சார்பு அணி நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர். கூட்டத்தில் திருச்சி புறநகர் மாவட்டத்தில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் எடப்பாடி பழனிச்சாமிக்கு சிறப்பான வரவேற்பு அளிப்பது, கழக வெற்றிக்கு பாடுபடுவது என முடிவு செய்யப்பட்டது.
Comments are closed.