திருச்சிக்கு நாளை 29-ம் தேதி வருகை தரும் எடப்பாடி பழனிசாமிக்கு உற்சாக வரவேற்பு… * திருச்சி மாநகர் மாவட்ட அதிமுக செயலாளர் ஜெ.சீனிவாசன் அழைப்பு!
திருச்சி மாநகர் மாவட்ட அதிமுக செயலாளரும், முன்னாள் துணை மேயருமான ஜெ.சீனிவாசன் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் அவர் தெரிவித்து
இருப்பதாவது:-
கழக பொதுச் செயலாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி நாளை( 29.7.2025) செவ்வாய்கிழமை சிவகங்கை மாவட்டத்தில் பரப்புரை மேற்கொள்கிறார். இதற்காக நாளை காலை 10 மணி அளவில் சென்னையில் இருந்து விமானம் மூலம் திருச்சி விமான நிலையம் வந்தடைகிறார். அவருக்கு விமான நிலையத்தில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட உள்ளது. இதில், தலைமை கழக நிர்வாகிகள், மாவட்ட கழக நிர்வாகிகள், பொதுக்குழு உறுப்பினர்கள், சார்பு அணி செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகள், பகுதி கழக செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகள், வட்டக் கழக செயலாளர்கள்,l, கழக செயல்வீரர்கள், வீராங்கனைகள், தொண்டர்கள் திரளாக கலந்து கொண்டு நமது கழக பொதுச்செயலாளருக்கு உற்சாக வரவேற்பு அளித்திட வேண்டுகிறேன். இவ்வாறு அதில் அவர் தெரிவித்துள்ளார்.
Comments are closed.