திருச்சி, அதவத்தூரில் “ரோட்டரி கிளப் ஆஃப் திருச்சிராப்பள்ளி போர்ட்” சார்பில் ரூ.25 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட பள்ளிக் கட்டிடம்- * அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யா மொழி திறந்து வைத்தார்…!
திருச்சி மாவட்டம், சோமரசம்பேட்டை, அதவத்தூரில் முத்துராஜா மானிய நடுநிலைப்பள்ளி செங்கல்பட்டு வருகிறது. பழைமையான இந்த பள்ளி ஓட்டு கட்டிடத்தில் செயல்பட்டு வந்தது. இதனை இடித்து விட்டு கான்கிரீட் கட்டிடமாக கட்டித்தர “ரோட்டரி கிளப் ஆப் திருச்சிராப்பள்ளி ஃபோர்ட்” முன் வந்தது. அதன்படி ரூ.25 லட்சம் திட்ட மதிப்பீட்டில் பழமையான ஓட்டு கட்டிடத்தை இடித்து விட்டு கான்கிரீட் கட்டிடம் கட்டிக் கொடுக்கப்பட்டது. இதற்கான திறப்பு விழா இன்று(08-06-2025) காலை சிறப்பாக நடைபெற்றது. விழாவிற்கு ரோட்டரி 3000 ஆளுநர் இராஜ கோவிந்தசாமி தலைமை தாங்கினார். சிறப்பு விருந்தினராக தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பங்கேற்று புதிய கட்டிடத்தை திறந்து வைத்து ரோட்டரி சங்க நிர்வாகிகளை வெகுவாக பாராட்டினார். இந்த நிகழ்ச்சியில் மாநகராட்சி மண்டல குழு தலைவர் மற்றும் கிழக்கு மாநகர திமுக செயலாளர் மு.மதிவாணன், ரோட்டரி சங்கத் தலைவர் கே.இராமகணேசன், செயலாளர் ஆர்.ரமேஷ் நடராஜன், திட்ட தலைவர் எஸ்.பி. அண்ணாமலை, திட்ட இயக்குனர் டி.பி.பாலாஜி மற்றும் ரோட்டரி சங்க நிர்வாகிகள், உறுப்பினர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
Comments are closed.