சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே பெத்தநாயக்கன் பாளையத்தில் திமுக இளைஞரணி இரண்டாவது மாநில மாநாடு வருகிற 21ஆம் தேதி( ஞாயிற்றுக்கிழமை) நடைபெற உள்ளது. மாநாட்டில் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் மற்றும் அமைச்சர்கள், சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள் என பலர் பங்கேற்க உள்ளனர்.
இதற்காக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து பாதுகாப்பு பணிக்காக ஏராளமான காவல்துறையினர் சேலம் வந்துள்ளனர். இந்நிலையில் திருவள்ளூர் மாவட்டம் கே.கே சத்திரம் காவல் நிலைய போலீஸ்காரர் ராஜா (31) என்பவரும் பாதுகாப்பு பணிக்காக வந்துள்ளார் . இவர்கள் தலைவாசல் அருகே உள்ள தனியார் கல்லூரியில் தங்க வைக்கப்பட்டுள்ள நிலையில் திடீரென ராஜா விஷம் அருந்தி தற்கொலைக்கு முயன்றதாக கூறப்படுகிறது . சக போலீசார் அவரை மீட்டு சிகிச்சைக்காக ஆத்தூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர் . அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார். குடும்பதகராறு காரணமாக, அவர் தற்கொலைக்கு முயன்றதாக ௯றப்படுகிறது.
Now Playing
Now Playing
Now Playing
Now Playing
Now Playing
Now Playing
1
of 946
Comments are closed, but trackbacks and pingbacks are open.