Rock Fort Times
Online News

ரூபாய் 9 லட்சம் மதிப்பிலான லாரி டயர்களை திருடிய நபர் திருச்சியில் சிக்கினார் !

திருச்சி மணிகண்டம் அலுந்தூரில் இயங்கி வரும் ஒரு நிறுவனத்திற்கு வெளியே லாரிகள் நிறுத்தப்பட்டிருந்தது. அதில் 12 லாரிகளிலிருந்து சுமார் 6 லட்சம் ரூபாய் மதிப்பிலான 13 டயர்கள் மற்றும் டிஸ்குகள் திருடப்பட்டுள்ளது. மேலும் அந்த பகுதியில் செயல்பட்டு வரும் மற்றொரு டயர் கம்பெனியில் சுமார் 3 லட்சம் ரூபாய் மதிப்பிலான 12 புதிய டயர்களும் திருடப்பட்டிருந்தது. இது குறித்து அந்த இரண்டு கம்பெனிகளின் அதிகாரிகள் மணிகண்டம் காவல்துறையில் புகார் அளித்திருந்தனர். புகாரின் அடிப்படையில் காவல்துறை உதவி கண்காணிப்பாளர் DSP அறிவழகன் மற்றும் திருவெறும்பூர் தனிப்படை போலீசார் தீவிர விசாரணை நடத்தியதில் அந்த டயர்களை திருடியது திருப்பத்தூரை சேர்ந்த கோவிந்தன்(48) என்பது தெரியவந்தது.

அதனையடுத்து கோவிந்தனை தனிப்படை போலீசார் கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்து 21 டயர்கள் மற்றும் 9 டிஸ்குகளையும் அந்த டயர்களை திருட பயன்படுத்திய லாரியையும் போலீசார் பறிமுதல் செய்தனர். கைது செய்யப்பட்ட கோவிந்தனை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.

Comments are closed, but trackbacks and pingbacks are open.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்