கோலாலம்பூரில் இருந்து திருச்சி சர்வதேச விமான நிலையத்துக்கு இன்று (ஜூலை 16) அதிகாலை விமானம் ஒன்று தரையிறங்கியது. அதில் வந்த பயணிகள் அனைவரும் இறங்கி சென்று விட்ட நிலையில் ஒரு பயணி மட்டும் தனது இருக்கையில் சாய்ந்து கிடந்தார். அவர் அயர்ந்து தூங்குகிறார் என்று நினைத்த விமான நிலைய ஊழியர்கள் அவரை எழுப்பி உள்ளனர். ஆனால் அவர் உயிரிழந்து விட்டது தெரிய வந்தது. இறந்த பயணி யார்?, எந்த ஊரை சேர்ந்தவர்? என்று விமான நிலைய அதிகாரிகள் விசாரித்த போது அவர், சிவகங்கை மாவட்டம் இளையான்குடியைச் சேர்ந்த சசிகுமார் (வயது 43 ) என்பது தெரியவந்தது. அவரை வரவேற்க யாரும் விமான நிலையத்திற்கு வரவில்லை. அவர் வைத்திருந்த செல்போன் மூலம் அதில் உள்ள எண்களை தொடர்பு கொண்ட போது யாரும் எடுக்கவில்லை. இதனால் விமான நிலைய ஊழியர்கள் அவரது உடலை விமான நிலைய போலீசாரிடம் ஒப்படைத்தனர். அவர்கள் பிரேத பரிசோதனைக்காக அவரது உடலை திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அவர் விமானத்தில் பயணிக்கும் போது மாரடைப்பு ஏற்பட்டு இறந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது.
Comments are closed.