திருச்சி மாவட்டம், திருவெறும்பூர் அருகே உள்ள காட்டூர் பாத்திமாபுரத்தை சேர்ந்த ஜெய பிரபுவுக்கும்(39), துவாக்குடி ராவுத்தன் மேடு பகுதியைச் சேர்ந்த சுகன்யாவுக்கும்(33) கடந்த செப்டம்பர் மாதம் திருமணம் நடந்தது. சந்தோசமாக வாழ்க்கை நடத்திய நிலையில் திடீரென அவர்களிடையே மன கசப்பு ஏற்பட்டது. இதன் காரணமாக சுகன்யா கடந்த மாதம் 23ஆம் தேதி கணவர் வீட்டை விட்டு சென்று விட்டார். சுகன்யாவை பல இடங்களில் தேடியும் கிடைக்காததால் கடந்த மாதம் 23ம் தேதி திருவெறும்பூர் காவல் நிலையத்தில், ஜெயபிரபு புகார் செய்தார். இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
அப்போது சுகன்யாவுக்கு ஜெயபிரபுவை பிடிக்கவில்லை என்றும், திருமணத்திற்காக தங்களது வீட்டில் கொடுத்த சீர்வரிசைக்கு பதிலாக ஜெயபிரபு கட்டிய தாலியை மட்டும் எடுத்து செல்வதாக அவர் எழுதிய கடிதம் போலீசாருக்கு கிடைத்தது. மேலும், சுகன்யா ஏற்கனவே காதலித்து 5 ஆண்டுக்கு முன்பு திருமணம் செய்து கொண்ட குமாருடன் சென்று விட்டது தெரியவந்தது. அவர்கள் எங்கு இருக்கிறார்கள் என்று தெரியவில்லை. அவர்களை போலீசார் தேடி வருகின்றனர். திருமணம் செய்த பெண், காதலருடன் ஓடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Error 403 The request cannot be completed because you have exceeded your quota. : quotaExceeded
Comments are closed, but trackbacks and pingbacks are open.