திருச்சி, மணிகண்டம் அருகே தாறுமாறாக ஓடிய டாரஸ் லாரி ஆற்றுப் பாலத்தில் மோதி நின்றதால் பெரும் விபத்து தவிர்ப்பு…
நாகலாந்து மாநில பதிவுஎண் கொண்ட டாரஸ் லாரி ஒன்று தூத்துகுடியில் இருந்து சென்னை சென்றுகொண்டிருந்தது. அப்போது மணிகண்டம் அருகே
மட்டபாறைபட்டி ஆத்து பாலம் பகுதியில் முன்னே சென்ற காரில் மோதாமல் இருக்க டாரஸ் லாரியின் டிரைவர் பிரேக் அடித்துள்ளார். இதனால் கட்டுப்பாட்டு இழந்த லாரி,சாலை தடுப்பு கட்டையை தாண்டி தாறுமாறாக ஓடியது. பின் பைபாஸை ஒட்டியுள்ள ஆத்துபாலத் தடுப்பில் மோதி நின்றது, இதனால் ஏற்பட்ட அதிக சத்தத்தால், அந்தப் பகுதி மக்கள் ஓடி வந்து டாரஸ் லாரியில் இருந்த வட மாநில ஓட்டுநர்கள் இருவரை காப்பாற்றினர்.

விபத்து குறித்து மணிகண்டம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இதனை அடுத்து மணிகண்டம் போலீசார் சம்பவ இடத்திற்க்கு விரைந்துவந்து போக்கு வரத்தை சரி செய்து வட மாநில ஓட்டுநர் இருவரிடம் விசாரனை மேற்கொண்டு வருகின்றனர். இந்த விபத்து காரணமாக அந்த பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது

Comments are closed.