Rock Fort Times
Online News

விரைவில் ஆணவக் கொலைகளுக்கு எதிரான சட்டம்..!- நம்புகிறார் கனிமொழி எம்.பி…

திருநெல்வேலியில் கடந்த 27ம் தேதி ஐ.டி ஊவியரான கவின் குமார் ஆணவக் கொலை காரணமாக வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் பெரும் பரபரப்பையும் அதிர்வலைகளையும் ஏற்படுத்தி உள்ளது. ஏற்கனவே இக்கொலை சம்பவத்தில் குற்றவாளியாக சுர்ஜித் கைது செய்யப்பட்டார். பின்னர் அவரது தந்தையான காவல் அதிகாரி சரவணன் கைது செய்யப்பட்டார். இந்த நிலையில் ஆறுமுக மங்கலத்தில் உள்ள கவினின் வீட்டிற்கு கனிமொழி எம்.பி அமைச்சர்கள் கே.என்.நேரு, அனிதா ராதாகிருஷ்ணன், ஆகியோர் வந்திருந்து அவர்களின் குடும்பத்திற்கு ஆறுதல் தெரிவித்தனர். இதன் பின் செய்தியாளர்களிடம் பேசிய கனிமொழி எம்.பி. இப்படிப்பட்ட ஆணவக் கொலைகள் நடக்கக்கூடாது. முதல்வர் சார்பில் அமைச்சர்களுடன் பெற்றோரை சந்தித்துள்ளோம். இச்சம்பவத்தில் சம்பந்தபட்டவர்கள் யாராக இருந்தாலும் நடவடிக்கைக்கு உட்படுத்தப்படுவார்கள். இந்த வழக்கு நடத்தப்பட்டு பெற்றோர்களுக்கு நிச்சயம் நியாயம் கிடைக்கக்கூடிய ஒரு சூழல் உருவாகும். ஆணவக் கொலைகளுக்கு எதிராக நானும் நாடாளுமன்றத்தில் பேசியுள்ளேன். இது நாடு தழுவிய ஒரு பிரச்சனையாக உள்ளது. திருமாவளவன் இது தொடர்பாக அமைச்சர்களை சந்தித்து கோரிக்கை விடுத்துள்ளார். விரைவில் ஆணவக் கொலைகளுக்கு எதிரான சட்டம் நிறைவேற்றப்படும் என்று நம்புகிறோம் என்றார்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்